15 மணி நேர பிரசவ வலி.. ஜான் புள்ளையா இருந்தாலும் ஆண் புள்ளையை ஈன்ற வெள்ளை திமிங்கலம்- வீடியோ
டெல்லி: வெள்ளைத் திமிங்கலம் ஒன்று 15 மணி நேர பிரசவ வலிக்கு பிறகு ஆண் குட்டியை ஈன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கருவில் இருக்கும் குழந்தை எப்படி வெளியுலகிற்கு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் இது போன்ற பிரசவங்களை நேருக்கு நேர் பார்த்தவர்கள் கூட இருக்கக் கூடும். அது போல் நாய், மாடு, ஆடு உள்ளிட்டவை குட்டி ஈணுவதை கிராமத்தில் பார்த்திருப்போரும் உண்டு.
ஆனால் கடல்வாழ் உயிரினங்கள் குட்டி ஈணுவதை பார்ப்பது மிகவும் அரிது. கடல்வாழ் உயிரினங்களை வளர்க்கும் ஏதாவது ஒரு நிறுவனம் அந்த காட்சிகளை படம் பிடித்து காட்டினால்தான் உண்டு.

வைரல்
அது போன்ற ஒரு அரிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. ஷெட் எனப்படும் கடல்வாழ் உயிரினங்கள் இருக்கும் பகுதியில் பெல்லா என பெயரிடப்பட்ட வெள்ளைத் திமிங்கலம் ஒன்று குட்டி போடும் நிலையில் இருந்தது. கடந்த 21-ஆம் தேதி அதிகாலை முதல் பிரசவ வலியால் துடித்தது.

வெள்ளைத் திமிங்கலங்கள்
சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8.42 மணிக்கு ஒரு துருதுருவென இருக்கும் ஆண் குட்டியை ஈன்றது. இது கவனிக்கப்படத்தக்க ஒரு விஷயமாகும். அதாவது எப்போதும் வெள்ளைத் திமிங்கலங்கள் குட்டி போட்டால் முதலில் குட்டியின் வால் பகுதிதான் முதலில் வரும்.

தாயும் சேயும் நலம்
ஆனால் இந்த திமிங்கலம் குட்டி ஈன்ற போது முதலில் தலை பகுதி வெளியே வந்தது. அதனால் இது மிகவும் அரிய பிரசவமாகும். இறுதியில் குட்டி செமையாக நீந்தி மேலெழும்பியது. தாயும் மேலே சென்று அதன் குட்டியை வருடியது. தாயும் சேயும் நலமாக உள்ளார்கள். பிறந்தவுடன் ஆண் குட்டி துள்ளிக் குதித்து விளையாடியதை கண்ட ஊழியர்கள் ஆரவாரம் செய்தனர்.

ஆண்கள்
வெள்ளை திமிங்கலம் எனப்படும் பெலுகா திமிங்கலங்கள் வடதுருவப் பகுதியின் கடலில் வாழக் கூடியவை. கடற்பாலூட்டி குடும்பத்தில் இந்த இனம் மட்டுமே வெள்ளை நிறத் தோற்றம் கொண்டதாகும். இந்த திமிங்கலங்கள் 5 மீட்டர் நீளம் வரை வளரும். பெண் வகையை விட ஆண்கள் மீக நீளமாக வளரும்.
|
பெண் திமிங்கலங்கள்
ஆண் திமிங்கலங்கள் 1,360 கிலோ எடையும் பெண் திமிங்கலங்கள் 900 கிலோ எடையும் கொண்டிருக்கும். பொதுவாக, பிறக்கும்போது 1.5 மீட்டர் நீளமும் 80 கிலோ எடையும் கொண்டு சாம்பல் நிறத்தில் இருக்கும். இந்த அரிய திமிங்கலங்கள் வடதுருவ கடல் பகுதியில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications