கொரோனா பயங்கர ருத்ரதாண்டவம்- ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 3, 827, டெல்லியில் 3,137 பேருக்கு பாதிப்பு
டெல்லி: நாட்டில் கொரோனாவின் பாதிப்பு மிக மோசமாக அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 3,827 பேருக்கும் டெல்லியில் 3,137 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் கொடூரமாக இருந்து வருகிறது. உலக நாடுகள் அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை தொடர்ந்து இந்தியா 4-வது இடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் 3827 பேருக்கு கொரோனா உறுதியானது.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,24,331 ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமையன்று மட்டும் மகாராஷ்டிராவில் மொத்தம் 142 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,893 ஆக உயர்ந்துவிட்டது.
மும்பையில் மட்டும் 1,269 பேருக்கு வெள்ளிக்கிழமை கொரோனா உறுதியானது. மும்பையில் வெள்ளிக்கிழமையன்று 114 பேர் உயிரிழந்தனர். மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,068 ஆக இருக்கிறது.
மகாராஷ்டிராவைப் போல டெல்லியிலும் கொரோனா தாக்குதல் உக்கிரமாக இருக்கிறது. ஒரேநாளில் 3,137 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,116 ஆக உயர்ந்தது.
டெல்லியில் ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்ததால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2035 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
Recommended Video
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications