டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

களத்திற்கு வந்த கஸ்தூரி.. இந்தியை தூக்கிப் பிடித்த அஜத் தேவ்கனுக்கு.. சுடச் சுட பதிலடி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தி தேசியமொழி என்ற பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும், கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கும் இடையேயான டுவிட்டர் கருத்து பரிமாற்றம் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. இந்நிலையில் தான் ‛‛பெரும்பான்மையான பெருமைமிகு இந்தியர்களுக்கு இந்தி ஒருபோதும் தாய்மொழியும் இல்லை. தேசிய மொழியும் இல்லை'' என நடிகர் அஜய் தேவ்கனுக்கு, நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

'விக்ரம் ராணா' பட புரோமோஷன் விழாவில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் பேசுகையில், ‛‛இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்களை தயாரிக்கிறார்கள். இந்த படங்களை தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்கிறார்கள்'' என கூறியிருந்தார்.

இதுதொடர்பான வீடியோ, செய்திகள் இணையதளத்தில் வைரலாகின. இதற்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் எதிர்ப்பு தெரிவித்தார்.

2024 லோக்சபா தேர்தலை குறிவைத்த களமிறங்கும் பாஜக... தெற்கில் கொத்தாக அள்ள 2024 லோக்சபா தேர்தலை குறிவைத்த களமிறங்கும் பாஜக... தெற்கில் கொத்தாக அள்ள

அஜய் தேவ்கன் டுவிட்

அஜய் தேவ்கன் டுவிட்

இதுபற்றி அஜய் தேவ்கன் இந்தி மொழியில் தனது டுவிட்டரில், ‛‛சகோதரர் கிச்சா சுதீப், இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்'' என்றார்.

சுதீப் பதிலடி

சுதீப் பதிலடி

இதற்கு கிச்சா சதீப், "என்னுடைய பேச்சின் பொருள் தவறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன் சார். நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படி சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். புண்படுத்த வேண்டும் என்றோ விவாதம் செய்ய வேண்டும் என்றோ நான் அப்படி சொல்லவில்லை" என்றார். மேலும், இன்னொரு பதிவில், "நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனெனில் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் என்னுடைய இந்த பதிலை ஒருவேளை நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அது உங்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?" என்று பதிலடி கொடுத்தார்.

இறங்கி வந்த அஜய் தேவ்கன்

இறங்கி வந்த அஜய் தேவ்கன்

இதையடுத்து அஜய் தேவ்கன், ‛‛நீங்கள் என் நண்பர். தவறான புரிதலை சரிசெய்ததற்கு நன்றி. நாம் அனைத்து சினிமா துறையையும் ஒன்றாக தான் நினைக்கிறேன்.அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். நாம் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஒருவேளை மொழிபெயர்ப்பில் தவறு இருந்திருக்கலாம்'' எனக்கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

டுவிட்டரில் அதிகரித்த விவாதம்

டுவிட்டரில் அதிகரித்த விவாதம்

இருப்பினும் இவர்கள் 2 பேருக்கும் இடையே நடந்த இந்த விவாதம் இந்தியா முழுவதும் எதிரொலிக்க துவங்கியது. இதனால் டுவிட்டரில் இந்திக்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துகள் தொடர்ந்து பதிவேற்றப்பட்டது. மேலும் தேசிய மொழி இந்தியா என்பது தொடர்பான விவாதம் சூடுபிடித்தது.

அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நடிகர், நடிகைகள் வரை இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் தேசியமொழி இந்தியா?

அமெரிக்காவின் தேசியமொழி இந்தியா?

இந்நிலையில் தான் நடிகர் அஜய் தேவ்கனுக்கு, நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது : மரியாதைக்குரிய அஜய் தேவ்கன் அவர்களே, பல ஹாலிவுட் திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டுகின்றன.இதனால் இந்தி அமெரிக்காவின் தாய்மொழி மற்றும் தேசியமொழி என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். சீனா, ஜப்பான், வளைகுடா நாடுகளிலும் இந்தி திரைப்படங்கள் உள்ளூர் மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.பல இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எப்போதும் பிராந்திய மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஏன் அப்படி நடக்கிறது?. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?.

கலை எல்லைகளை கடந்தது

கலை எல்லைகளை கடந்தது

ஜாம்பவான்களான துளசிதாஸ், கபீர், முல்க்ராஜ் ஆனந்த், குஷ்வந்த் சிங் ஆகியோரின் இந்தி இலக்கிய படைப்புகள் இந்தியாவின் பிற மொழிகள் உள்பட சர்வதேச மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஏன் நடந்தது?. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?. ஒரு நடிகர் என்ற அடிப்படையில் கலை என்பது எல்லைகளை கடந்தது என்பது உங்களுக்கு தெரியும். கலைக்கும், கலைஞர்களுக்கு ஒருபோதும் மொழி தடையாக இருக்காது.

பெருமைமிகு இந்தியர்களுக்கு...

பெருமைமிகு இந்தியர்களுக்கு...

பான் இந்தியன் தெலுங்கு மொழியில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் தெலங்கு தியாகியாக நீங்கள் நடித்துள்ளீர்கள். இந்தி உள்பட 7 இந்திய மொழிகளில் உங்கள் வெப்சீரிஸ் ருத்ரா உள்ளது. இது ஆங்கில சப்டைட்டிலாகவும் இருக்கிறது. இது ஏன் என்று சொல்ல முடியுமா. இந்த விஷயத்தில் நான் கிச்சா சுதீப் மற்றும் 700 மில்லியன் இந்தியர்களுடன் நிற்கிறேன். பெரும்பான்மையான பெருமைமிகு இந்தியர்களுக்கு இந்தி ஒருபோதும் தாய்மொழியாகவும், தேசிய மொழியாகவும் இருக்காது.

இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
A Twitter exchange between Bollywood actor Ajay Devgn and Hindi actor Kichha Sudeep, the national language of Hindi, has become a hot topic of discussion. It is in this context that Hindi has never been the mother tongue of the majority of proud Indians. There is no national language, '' actress Kasturi retaliated to actor Ajay Devgan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X