இந்து மதம் சகிப்புத்தன்மை கொண்டது.. எனவே பத்திரிக்கையாளர் ஜுபைருக்கு ஜாமீன் தரலாம்: டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: இந்து மதம் மிகவும் பழமையானது மற்றும் சகிப்புத்தன்மை கொண்டது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறி ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு ஜாமின் வழங்கி உள்ளது.
‛ஆல்ட் நியூஸ்' எனும் ‛பேக்ட் செக்' இணையதளத்தில் இணை நிறுவனர் முகமது ஜுபைர். மத உணர்வை தூண்டியதாக கடந்த ஜூன் 27 ம் தேதி முகமது ஜுபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
2018ல் டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

டெல்லி-உத்தர பிரதேசத்தில் வழக்கு
இதையடுத்து அவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லியை தொடர்ந்து உத்தர பிரதேச மாநில போலீஸ் நிலையங்களிலும் மத உணர்வை தூண்டியது, இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்களின் அடிப்படையில் உத்தர பிரதேசம் மாநிலம் சீதாபூர், லக்கிம்பூர் கெரி, காசியாபாத், முசாபர்நகர் மற்றும் ஹத்ராஸ் மாவட்டங்களில் அவர் மீது 6 தனித்தனி எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜாமின் வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம்
இதில் சீதாபூர் வழக்குக்கு அவருக்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பிற வழக்குகளுக்கு ஜாமின் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லி போலீசார் பதிவு செய்த வழக்கில் ஜாமின் கோரி முகமது ஜுபைர் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று முகமது ஜுபைருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் இன்னும் சில வழக்குகளில் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதனால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

உயர்நீதிமன்ற வாதம்
இந்நிலையில் தான் நேற்று முகமது ஜுபைருக்கு ஜாமின் வழங்கியபோது டெல்லி உயர்நீதிமன்றம் சில கருத்துகளை கூறியது. அதாவது குற்றம் சாட்டப்பட்ட முகமது ஜுபைர் தனது டுவிட்டர் பதிவில், ‛‛2014க்கு முன் மற்றும் "2014 க்கு பின் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இந்து சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். இது மக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வைத் தூண்டுவதற்கு போதுமானதாகும்'' என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்து மதம் சகிப்புத்தன்மை கொண்டது
இதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் அரசியல் கட்சி ஒன்றை விமர்சனம் செய்ததாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என மறைமுகமாக கேள்வி எழுப்பும் வகையில் நீதிபதி தேவேந்திர குமார் ஜங்காலா சில கருத்துகளை கூறினார். அதன்படிஇந்து மதம் பழமையான மற்றும் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதங்களில் ஒன்றாகும். இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள். இதனால் தான் இந்து மதத்தினர் தாங்கள் வழிபடும் கடவுள், தெய்வத்தின் பெயரை பெருமையுடன் தங்களின் நிறுவனம், குழந்தைகளுக்கு வைத்து அழைக்கின்றனர்.

பெயர்கள் சட்டத்தை மீறுவதாக இல்லை
மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்கள் தெய்வங்களின் பெயரில் உள்ளன. குற்ற நோக்கமின்றி ஒரு நிறுவனம், அமைப்பு அல்லது குழந்தைக்கு இந்து தெய்வத்தின் பெயர் வைத்தால் அது இந்திய தண்டனை சட்டம் 153A (மதம், இனம், மொழி அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), 295A(மதம், மத உணர்வு, மத நம்பிக்கைககளை அவமதித்தல்) ஆகியவற்றை மீறுவதாக இல்லை.

விமர்சனங்களை ஏற்கும் கட்சிகள்
இந்திய ஜனநாயகத்தில், அரசியல் கட்சிகள் விமர்சனங்களை ஏற்கின்றன. அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகள் மீதான விமர்சனங்களை பொதுமக்களிடம் இருந்து எதிர்கொள்ள தயங்குவது இல்லை. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு எதிர்ப்பு குரல் அவசியமானதாக உள்ளது. இந்த விஷயத்தில் இந்திய தண்டனை சட்டம் 153 ஏ மற்றும் 295 ஏ பிரிவுகளை செயல்படுத்துவது நியாயமில்லை.

ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம்
மேலும் மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாத வரையில் ஜனநாயகம் செயல்படவோ, செழிக்கவோ செய்யாது. இதனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவு என்பது ஒருவருக்கு பேச்சுரிமை, கருத்து சுதந்திரத்தை வழங்கிறது. சுதந்திரமான கருத்து பரிமாற்றம், கட்டுப்பாடுகள் இன்றி தகவல்களை பரப்புதல், ஒரு விஷயத்தை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அனுகுதல், விவாதித்து கருத்துகளை உருவாக்குதல் உள்ளிட்டவை சுதந்திரமான சமுதாயத்தின் குறியீடுகளாக உள்ளன. இதில் பிரிவு 19ல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரமும், (1)(ஏ) அதன் எல்லையும், கடமை, பொறுப்பையும் அடக்கி வரம்புகளை நிர்ணயம் செய்கிறது.
Recommended Video

ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
மனுதாரர் 1983ல் வெளியான 'Kisi se na kehna'' திரைப்படத்தின் காட்சியை பதிவிட்டுள்ளார். இந்த திரைப்படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் காட்சி தொடர்பாக குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாக எந்த புகாரும் இன்று வரை வரவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் டுவிட்டர் பதிவால் புண்படுத்தப்பட்ட நபரின் அடையாளத்தை காட்ட காவல்துறை தவறியுள்ளது. யாருடைய புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் உண்மை, சூழல் அடிப்படையில் மனுதாரருக்கு போலீஸ் காவல் தேவையில்லை எனக்கூறி சில நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்படுகிறது'' என நீதிபதி கூறினார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications