Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா..இவ்வளவு பேரா? உலக நாடுகளை ஆளும் இந்திய வம்சாவளிகள்.. ரிஷி சுனக் வரை நீண்ட பட்டியல்! முழுவிபரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரிட்டன் பிரதமாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாகி உள்ளார். இந்நிலையில் தான் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் எந்தெந்த நாட்டில் உயர் பதவிகளில் உள்ளனர் என்பது பற்றி பலர் தேட தொடங்கி உள்ளனர். அதற்கு விடை கிடைக்கும் வகையில் உங்களுக்கு இந்த செய்தி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த பலரும் வெளிநாடுகளில் சாதித்து வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை இந்தியர்கள் அலங்கரித்து வருகின்றனர்.

இதேபோல் அரசியலிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மிக உயரிய பொறுப்புகளில் வகித்து வருகின்றனர்.

கமலா ஹாரீஸ்-ரிஷி சுனக்

கமலா ஹாரீஸ்-ரிஷி சுனக்

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் துணை அதிபராக உள்ளார். அதேபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இவர்களை போல் இன்னும் சில இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பிற நாடுகளில் முக்கிய பதவிகளில் உள்ளனர். அவர்கள் யார்? எந்தெந்த நாட்டில் முக்கிய பதவிகளில் உள்ளனர்? என்பது பற்றிய முழுதகவல்கள் வருமாறு:

போர்ச்சுக்கல் பிரதமர்

போர்ச்சுக்கல் பிரதமர்

போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமராக அன்டோனியோ கோஸ்டா உள்ளார். இவர் சாவோ செபாஸ்டியோ டா பெட்ரீராவில் பிறந்தார். 1961ல் பிறந்த இவருக்கு 61 வயது ஆகிறது. இவர் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி முதல் போர்ச்சுக்கல் பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் லிஸ்பன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நிலையில் வழக்கறிஞராக பணியாற்றி அரசியலில் நுழைந்து பிரதமராகி உள்ளார். இவர் இந்தியாவின் கோவாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கயானா ஜனாதிபதி

கயானா ஜனாதிபதி

கயானா நாட்டின் ஜனாதிபதியாக முகமது இர்பான் உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவ இவர் கயானா நாட்டின் லியோனோராவில் பிறந்தார். இவர் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஜனாதிபதியாக செயல்பட்டு வருகிறார். 42 வயது நிரம்பிய அவர் அரசியலில் நுழைந்து வீட்டு வசதித்துறை அமைச்சராகவும், சுற்றுலா, வர்த்தகப்பிரிவு அமைச்சராக இருந்த நிலையில் ஜனாதிபதியாக செயல்பட்டு வருகிறார்.

மொரீஷியஸ் பிரதமர்

மொரீஷியஸ் பிரதமர்

மொரீஷியஸின் பிரதமராக பிரவீந்த் ஜக்நாத் உள்ளார். இவர் மொரீஷியஸின் பீனிக்ஸ் நகரில் பிறந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் 2017 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிரதமராக செயல்பட்டு வருகிறார். இவர் மொரீஷியஸின் முன்னாள் பிரதமர், ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த அனரூட் ஜக்நாத்தின் மகன் ஆவார். இவர்கள் உத்தர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவார்கள்.

மொரீஷியஸ் அதிபர்

மொரீஷியஸ் அதிபர்

மொரீஷியஸ் அதிபராக இருப்பவர் பிருத்விராஜ்சிங் ரூபன். இவர் கடந்த 2019 முதல் அதிபர் பதவியில் செயல்பட்டு வருகிறார். மொரீஷியஷின் குவாட்டர் போர்ன்ஸின் புறநகர் பகுதியில் பிறந்த பிருத்விராஜ்சிங், 1983ல் அரசியலில் நுழைந்த பல அமைச்சகங்களில் அமைச்சராக இருந்தார். தற்போது மொரீஷியஸ் அதிபராக செயல்பட்டு வருகிறார். இவரது முன்னோர்கள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். ஆர்ய சமாஜ் இந்து பாரம்பரியத்தை சேர்ந்தவர் தான் இந்த பிருத்விராஜ் சிங் ரூபன்.

சுரிநாம் ஜனாதிபதி

சுரிநாம் ஜனாதிபதி

தென்அமெரிக்கா கண்டத்தின் மிகச்சிறிய நாடாக சுரிநாம் உள்ளது. இந்த நாட்டின் ஜனாதிபதியாக சாந்தோகி உள்ளார். இவர் சூரினாம் நாட்டின் லீலிடார்ப் பகுதியில் பிறந்தார். போலீஸ் அதிகாரியாக பணியாற்றினார். அதன்பிறகு அரசியலில் நுழைந்து அந்நாட்டின் நீதி மற்றும் போலீஸ் துறை அமைச்சராக செயல்பட்ட நிலையில் தற்போது ஜனாதிபதியாக செயல்பட்டு வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் இந்து குடும்பத்தை சேர்ந்தவர்.

செஷல்ஸ் நாட்டின் ஜனாதிபதி

செஷல்ஸ் நாட்டின் ஜனாதிபதி

இதேபோல் செஷல்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் வேவல் ராம்கலவன். இவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது முன்னோர்கள் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள். இந்த செஷல்ஸ் இந்திய பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியில் 115 நாடுகளை கொண்ட தீவுநாடாக உள்ளது.

கமலா ஹாரீஸ்

கமலா ஹாரீஸ்

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரீஸ் உள்ளார். இவரது தாய் தமிழ்நாட்டை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தற்போது அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். கமலா ஹாரீசின் தாத்தா கோபாலன் மன்னார்குடி அருகே பைங்காநாட்டில் உள்ள துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர். கமலா ஹாரீசுக்கும் சென்னைக்க நீண்ட தொடர்பு உள்ளது.

 ரிஷி சுனக்

ரிஷி சுனக்

தற்போது பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி உள்ளார். 42 வயது நிரம்பிய ரிஷி சுனக்கின் தந்தை பெயர் யாஷ்வீர். தாய் பெயர் உஷா. ரிஷி சுனக்கின் தந்தை வழி தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் கென்யா குடிபெயர்ந்த நிலையில் அங்கிருந்து ரிஷி சுனக்கின் தந்தை பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். மேலும் ரிஷி சுனக்கின் மனைவி அக்சதா, கர்நாடகாவை சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். ரிஷி சுனக் இந்து மதத்தை பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 முந்தைய வரலாறு

முந்தைய வரலாறு

இவர்கள் அனைவரும் தற்போது முக்கிய பதவிகளில் உள்ளனர். இதுதவிர இதற்கு முன்பும் பல இந்திய வம்சாவளிகள் பிற நாடுகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர். சிங்கப்பூர் உள்பட பிற நாடுகளில் பல இந்திய வம்சாவளிகள் பிரதமர், அதிபர் பதவிகளில் வசித்த வரலாறு உண்டு என்பது நினைவில் வைத்து கொள்ளக்கூடியதாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+