டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆணுறை".. ஆஹா, அப்ப இதுவேறயா.. டபுள் மடங்காக எகிறிய "கருத்தடை" மாத்திரை.. புட்டு புட்டு வைத்த ஆய்வு

ஆணுறைகள் கொரோனா நேரத்தில் அதிக அளவு விற்பனையானதாக ஆய்வு கூறுகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுன் சமயத்தில், நம்முடைய நாட்டில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் அதிக அளவு விற்பனையானதாக ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, அதாவது 2020-ல் இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்தது.. அப்போது லாக்டவுன் போடப்பட்டிருந்தது.. பலருக்கும் வேலை இல்லை.. பெரும்பாலானோர் வீட்டிலேயே தான் முடங்கி கிடந்தனர்.

வருமானம் இன்றி தவிப்பது, பசியால் வாடுவது, வீட்டு வாடகை தர முடியாமல் அவஸ்தைப்படுவது என பல்வேறு பிரச்சனைகளில் பொதுமக்கள் சிக்கி தவித்தனர்.

 ஆன்லைன் ஆர்டர்

ஆன்லைன் ஆர்டர்

அதேசமயம், வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்ததால், ஆணுறையும் விற்பனை அதிகமானது... இது சம்பந்தமாக பல்வேறு நிறுவனங்கள் ஆணுறை விற்பனை தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தனர்.. அந்தவகையில், டன்சோ ஆப் மூலமாக ஆணுறைகள் விற்பனை குறித்த ஒரு புள்ளி விவரம் வெளியானது... எப்போதுமே இல்லாத அளவுக்கு, 2020-ம் ஆண்டில் மட்டும் ஆணுறை ஆர்டர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்திருந்ததாம்.. அதுமட்டுமல்ல, நைட் நேரங்களை விட, பகல் நேரங்களில்தான் அதிகமானோர், ஆணுறைகளை ஆர்டர் செய்து வாங்கியிருந்தார்கள்.

 ஆபார்ஷன்

ஆபார்ஷன்

அதிலும், நைட் நேரங்களை விட பகல் நேரங்களில் 3 மடங்கு அதிகமாக ஆணுறைகளை அவர்கள் ஆர்டர் செய்திருக்கிறார்கள். நகரங்களை பொறுத்தவரையில், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் அதிக பேர் ஆர்டர் செய்திருந்தனர்.. ஹைதராபாத்தில் 6 மடங்கு அதிகமாகவும், சென்னையில் 5 மடங்கு அதிகமாகவும், ஜெய்ப்பூரில் 4 மடங்கு அதிகமாகவும், மும்பையில் 3 மடங்கு அதிகமாகவும், பெங்களூருவில் 3 மடங்கு அதிகமாகவும் ஆர்டர் செய்திருந்தனர்.. ஆணுறை மட்டுமல்லாமல், சிகரெட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரோலிங் பேப்பரும் ஊரடங்கு காலத்தில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

படுஜோர்

படுஜோர்

அதேபோல, கருவுறுதலைக் கண்டறியும் கருவிகளும் ஊரடங்கு காலத்தில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டன.. இந்த செய்தி அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இப்போது இன்னொரு புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.. லாக்டவுன் சமயத்தில், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் விற்பனை படுஜோராக நடந்துள்ளது என்றும், அது தொடர்பாக, சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு அறிக்கையாகவே வெளியிட்டுள்ளது. அந்த புள்ளி விவர அறிக்கையில் உள்ளதாவது:

ஆணுறை

ஆணுறை

கடந்த 2021-22ம் வருடங்களில் கருத்தடை சிகிச்சை செய்து கொள்வது 25 சதவிகிதம் குறைந்துள்ளது... ஆனால், அதற்கு முந்தைய ஆண்டில் கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட ஆண் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 34.57 லட்சமாக இருந்த நிலையில், 2021-22 ம் ஆண்டில் 9.35 லட்சமாக குறைந்துள்ளது.. அதேசமயம், லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், ஆணுறைகள் விற்பனையானது 7 சதவீதம் அதிகரித்துள்ளது... கருத்தடை மாத்திரைகள் விற்பனையும் டபுள் மடங்காக எகிறிவிட்டது.. எச்.ஐ.வி மையங்கள் மூலமாக இலவசமாக ஆணுறைகள் விநியோகம் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, அதற்காக ரூ. 40 கோடி நிதியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது..

 ஆணுறைகள்

ஆணுறைகள்

மாநில வாரியாக, உத்தரபிரதேசத்தில் அதிக அளவில் ஆணுறைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.. இதற்கடுத்தபடியாக ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம், மேற்கு வங்காளம், ஆகிய மாநிலங்கள் ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.. இதற்கு அடுத்தபடியாக குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆக, ஊரடங்கு காலக்கட்டத்தில் கருத்தடை அறுவை சிகிச்சையை விட ஆணுறை, மாத்திரை போன்ற கருத்தடை சாதனங்களையே மக்கள் நாடியுள்ளனர் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

English summary
Huge Profit and the sale of condoms increased several times during the corona lockdown, says report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X