"ஹைபிரிட் பயங்கரவாதிகள்!" காஷ்மீர் தாக்குதல் காரணம் இவர்கள்தான்! ஸ்லீப்பர் செல்களை விட ரொம்ப டேஞ்சர்
டெல்லி: காஷ்மீரில் தாக்குதல் தொடரும் நிலையில், இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது ஹைபிரிட் பயங்கரவாதிகள் என்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீரில் இடையில் சில காலம் சற்று அமைதியான சூழல் இருந்தாலும், இப்போது மிக மிகப் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இது அம்மாநில மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஒருபுறம் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயல்வது தொடர்கிறது. அதை நமது ராணுவ வீரர்கள் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர்.

காஷ்மீர்
மற்றொரு புறம் காஷ்மீரில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. காஷ்மீரின் அரேஹ் மோகன்போரா கிளையில் உள்ள எலாக்கி தேஹாட்டி வங்கியின் மேலாளராக இருந்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய் குமார். இந்தச் சம்பவம் நடந்து வெறும் 12 மணி நேரத்திற்குள் புட்காமில் இரு தொழிலாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தொடர் கதை
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது காஷ்மீரில் தொடர் கதையாகி வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தான், குல்காம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். அதேபோல கடந்த மே 12இல் புத்காம் மாவட்ட தாசில்தார் அலுவலக எழுத்தர் ராகுல் பட் என்ற சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கடந்த மே 1ஆம் தேதி முதல் மட்டும் காஷ்மீரில் 3 போலீசார், 5 பொதுமக்கள் எனக் குறைந்தது 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டம்
இது காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால் காஷ்மீர் அரசு ஊழியர்கள் அனைவரும் இப்போது தங்களைச் சொந்த மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யும்படி போராட்டத்தில் குதித்து உள்ளனர். காஷ்மீரில் இப்போது அரசு ஊழியர்களைக் குறி வைத்து நடக்கும் கொலைகள் அதிகரித்துள்ளதால் இப்போதைய சூழலில் நாங்கள் பணிக்குத் திரும்பப் போவதில்லை என்று கூறி உள்ளனர்.

ஹைபிரிட் பயங்கரவாதிகள்
காஷ்மீரில் இதுபோன்ற கொடூர தாக்குதலை நடத்துபவர்கள் பயங்கரவாதிகள் இல்லை. மாறாக ஹைபிரிட் பயங்கரவாதிகளே இந்தச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். 'ஹைபிரிட்' பயங்கரவாதிகள் என்பவர்கள் பயங்கரவாதிகளாகப் பட்டியலிடப்படாதவர்கள். ஆனால் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் அளவுக்குத் தீவிரமாக்கப்பட்டவர்கள். இவர்களை பார்ட் டைம் பயங்கரவாதிகள் என்றும் கூட சிலர் அழைக்கின்றனர்.

ஹைபிரிட் பயங்கரவாதிகளே என்றால் என்ன
கடந்த சில ஆண்டுகளாகவே ஹைபிரிட் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்திவிட்டு, அமைதியாக தங்கள் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். இதனால், தாக்குதலுக்கு முன்னர் இவர்களைக் கண்டறிவது சிரமம். மேலும், தாக்குதலுக்குப் பின்னரும் இவர்களைப் பிடிப்பது சிரமம்.

கடினம்
அமைதியாக தங்கள் வேலைகளைப் பார்க்கும் இவர்கள், உத்தரவு வந்தால் பயங்கரவாத தாக்குதலை நடத்த எப்போதும் தயாராகவே இருப்பார்கள். அதாவது இவர்கள் பயங்கரவாதிகளைப் போலப் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. ஆனால், தாக்குதலை நடத்த எப்போதுமே தாயாக இருப்பார்கள். இவர்களைப் பயங்கரவாத அமைப்புகள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும். இவர்கள் சாதாரண நபர்கள் என்பதால் பக்கத்தில் வீட்டில் இருப்பவர்களுக்குக் கூட இவர்கள் மீது சந்தேகம் தோன்றாது. அவர்கள் பொது மக்களிடையே வசிப்பதால், அவர்களைக் கண்காணிப்பது மற்றும் கண்டுபிடிப்பது பாதுகாப்பு நிறுவனங்களுக்குக் கடினமாக உள்ளது.

ஸ்லீப்பர் செல் வித்தியாசம்
பொதுவாக ஸ்லீப்பர் செல்களை பற்றித் தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், இவர்களுக்கு இடையே வேறுபாடு உள்ளது. ஸ்லீப்பர் செல்கள் என்பது பயிற்சி பெற்ற பயங்கரவாதியாக இருப்பார்கள். அவர்களை சமூகத்தில் ஊடுருவ வைப்பது கடினம். ஆனால், ஹைபிரிட் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி எல்லாம் தேவையில்லை. மன ரீதியாக அவர்களை மாற்றி இருப்பார்கள். இவர்களுக்கான செலவும் குறைவு. மேலும், பயங்கரவாத அமைப்பின் கட்டமைப்பு குறித்து எதுவும் இவர்களுக்குத் தெரியாது என்பதால், மாட்டிக் கொண்டாலும் எந்த தகவலையும் பாதுகாப்புப் படையால் பெற முடியாது.

கோரிக்கை
கடந்த ஆண்டிலேயே சுமார் 15க்கும் மேற்பட்ட தாக்குதலை இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர். இப்போதும் அவர்களின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களைத் தடுக்க மத்திய அரசு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரம் ஹைபிரிட் பயங்கரவாதிகளைச் சமாளிக்கச் சிறப்புத் திட்டம் தேவை என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications