டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உருமாறிய கொரோனா வைரஸ்... பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, சிறப்பாக கையாண்டது இந்தியா- ஐசிஎம்ஆர்

Google Oneindia Tamil News

டெல்லி: இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸை இந்தியா வெற்றிகரமாக கையாண்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இந்த மாறுபட்ட வைரஸை எந்த நாடும் வெற்றிகரமாக எதிர்கொண்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ICMR says India successfully isolates and cultures UK-variant of coronavirus strain

இந்தியாவிலும் உருமாறிய வைரஸ் லேசான பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரஸை இந்தியா வெற்றிகரமாக கையாண்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட ஐசிஎம்ஆர் அதில் கூறியுள்ளதாவது:- இங்கிலாந்தில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. இங்கிலாந்து திரும்பியவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரித்தல், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மாறுபட்ட வைரஸை எந்த நாடும் வெற்றிகரமாக எதிர்கொண்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்று ஐசிஎம்ஆர் கூறியது.

English summary
The Medical Research Council of India (ICMR) has said that India has successfully dealt with the mutated corona virus that originated in the UK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X