இல்லதரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. குறைகிறது சமையல் எண்ணெய் விலை .. மத்திய அரசு உத்தரவு
டெல்லி: சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி உள்ளிட்ட 3 சமையல் எண்ணெய் மீதான சுங்க வரிகளை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதன் மூலம் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை உடனடியாக குறைகிறது. அரசின் இந்த செயல் இல்லதரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே அதிக அளவில் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. மொத்த தேவையில் 3-ல்2 பங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது இந்தியாவில் கச்சா எண்ணெய், தங்கத்துக்கு அடுத்தப்படியாக வெளிநாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படும் 3வது பொருளாக சமையல் எண்ணெய் உள்ளது.
கடந்த 2019-2020ம் ஆண்டில் நாட்டின் சமையல் எண்ணெய்யின் தேவை என்பது 24 மில்லியன் டன்னாக இருந்தது. உள்நாட்டு உற்பத்தி மூலமாக கிட்டத்தட்ட 10.65 மில்லியன் டன் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. ஆனால் மீதமுள்ள 13 மில்லியன் டன் சமையல் எண்ணைக்கு வெளிநாடுகளையே எதிர்பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. சுமார் 61 ஆயிரத்து 560 கோடி ரூபாய்க்கு, 13.35 மில்லியன் டன் மதிப்பிலான எண்ணெய்யை மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

50 சதவீதம்
SOLVENT EXTRACTORS ASSOCIATION OF INDIA எனப்படும் (SEA )அமைப்பின் தரவுகளின் படி, கடலை எண்ணெய் விலை கடந்த ஓராண்டில் மட்டும் 20 சதவீதம் உயர்ந்து இருந்தது. கடுகு எண்ணெய் விலை 50 சதவீதமும், வனஸ்பதியின் விலை 45 சதவீதமும், சூரிய காந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் விலை 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்து இருந்தது.

ஏன் விலை அதிகம்
தரம் பிரிக்கப்படாத, அதாவது crude பாமாயில். இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆனால், மலேசியாவில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களில் பலர் வங்கதேசம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள். கொரோனா பாதிப்பு எதிரொலியாக, மலேசியாவில் பெருமளவு தொழிலாளர்கள் பணிக்கு வராததால் விலை அதிகரித்தது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து, ஆண்டுதோறும் கிட்டதட்ட 2.5 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. சமீப காலங்களில் அந்நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதன் விளைவாக எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு விலை ஏற்றம் ஏற்பட்டது.

விலை குறைப்பு
இப்படி சமீப காலங்களாக உற்பத்தி குறைந்து சமையல் எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்ததால் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், விலையைக் கட்டுப்படுத்துவதற்காக சமையல் எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு கணிசமாக குறைத்தது. ஆனாலும் விலை பெரிய அளவில் குறையவில்லை. இதையடுத்து மீண்டும் எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரியை குறைத்துள்ளது,

வரிகள் குறைப்பு
கச்சா பாமாயிலின் இறக்குமதி வரி 10-லிருந்து 2.5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கச்சா சோயா மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வரி 7.5-லிருந்து 2.5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி வரியை 37.5-லிருந்து 32.5% ஆகக் குறைத்துள்ளது. இந்த தகவலை மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலம்
இந்த உத்தரவு நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் இந்த எண்ணெய்களின் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை குறையும். பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைத்திருப்பது கணிசமாக விலையை குறைக்க உதவியாக இருக்கும் என ஜி.ஜி. படேல் அண்ட் நிகில் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்த்பாய் படேல் தெரிவித்தார்.
Recommended Video

மத்திய அரசு
இதனிடையே சமையல் எண்ணெய் பதுக்கலை தடுப்பதற்காக, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோஸ்தகர்களிடம் இருந்து அடிக்கடி இருப்பு நிலவரத்தை கேட்டு பெறும்படியும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications