திடீரென இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்.. 2 பேர் பலி.. 6 பேரின் கதி என்ன? டெல்லியில் பெரும் சோகம்
டெல்லி: டெல்லியில் 3 மாடி கட்டத்தின் ஒரு பகுதி இன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் பலியாகினர். 6 பேரின் நிலைமை தெரியவில்லை. அவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

டெல்லியில் சாந்தினி சவுக் ஏரியாவில் சாவ்ரி பஜார் மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே புதிதாக 3 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இன்று காலையில் திடீரென்று அந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் கட்டட இடிபாடுகளுக்குள் மொத்தம் 8 பேர் சிக்கினர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 6 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் பலியானது தெரியவந்தது. மேலும் 6 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி ஸ்டேஷன்ஆபிசர் டிகே ராய் கூறுகையில், ''புதிதாக கட்டப்பட்டு வந்த 3 மாடி கட்டடம் இடிந்துவிழுந்துள்ளது. கட்டட இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என்று சொல்கின்றனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணிக்கு கூடுதல் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
அதன்படி கூடுதல் வீரர்களும் மீட்பு பணியில் இணைந்துள்ளனர். இதுபற்றி முகமது நயிம் என்பவர் கூறுகையில், ''காலை 9 முதல் 9.30 மணிக்குள் பெரிய சத்தம் கேட்டது. எங்களின் வீடு தான் இடிந்து விட்டதாக நினைத்து வெளியே வந்து பார்த்தோம். அப்போது தான் பக்கத்து கட்டடம் இடிந்தது தெரியவந்தது. அது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடமாகும்.
கடந்த 4 மாதங்களாக பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்து 3 அல்லது 4 லிண்டல்கள் சரிந்து விழுந்தன. அங்கு 3 முதல் 4 தொழிலாளர்கள் இருந்ததாக எங்களிடம் கூறினார்கள். தற்போது வரை ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
