இரவில் கட்கரிக்கு விருந்து! பகலில் மோடியுடன் சந்திப்பு!. சரத்பவாரின் திடீர் பாஜக பரிவு.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விருந்து வழங்கிய நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையேயான இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த சந்திப்பு குறித்து பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளன.

மகாராஷ்டிராவில் உத்தவ்தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன.

இந்த கூட்டணிக்கு ‛மகாராஷ்டிர விகாஸ் அகாடி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சார்பில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.

மகாராஷ்டிரா கூட்டணி மீது நடவடிக்கை

மகாராஷ்டிரா கூட்டணி மீது நடவடிக்கை

மகாராஷ்டிராவில் காலம் காலமாக பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெளியேறியது. உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளார். தொடர்ச்சியாக மத்திய விசாரணை அமைப்புகள் சார்பில் மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

இந்நிலையில் சிவசேனா, பாஜக கட்சியினர் ஒருவரையொருவர் பரஸ்பரம் தாக்கி பேசி வருகின்றனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜக மீது மென்மை போக்கை கடைப்பிடித்து வருவதாக சமீபத்தில் சிவசேனா குற்றம்சாட்டியது. அத்துடன் உள்துறையை கையில் வைத்துள்ளதால் விரைவில் மகாராஷ்டிரா பாஜக தலைவரின் வழக்குகளை தூசி தட்ட வேண்டும் என உத்தவ் தாக்கரே, சரத்பவாரிடம் கூறியிருந்தனர்.

இன்றும் பாய்ந்த நடவடிக்கை

இன்றும் பாய்ந்த நடவடிக்கை

இதற்கிடையே பாஜக சார்பில் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் மகாராஷ்டிரா ஆளும் கூட்டணி குறிவைக்கப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்று காலை சரத்பவார் கட்சியின் மூத்த தலைவரும், மகராஷ்டிரா உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக்கை சிபிஐ காவலில் எடுத்தது. நேற்று அகமலாக்கத்துறை சார்பில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக சிவசேனா எம்பியின் சஞ்சய் ராவத்தின் சொத்துகள் முடக்கப்பட்டன.

மோடியை சந்தித்த சரத் பவார்

மோடியை சந்தித்த சரத் பவார்

இந்நிலையில் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத்பவார், பிரதமர் நரேந்திர மோடியை இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் இருவரும் 20 நிமிடங்கள் வரை பேசினர். இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் திடீரென்று நடந்துள்ளது. இது தேசிய அரசியலில் பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள் விவாதம்

முக்கிய அம்சங்கள் விவாதம்

அதாவது இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்தும், மத்திய விசாரணை அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் இருவரும் பேசி இருக்கலாம் என கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கருத்து

தேசியவாத காங்கிரஸ் கருத்து

இதுகுறித்து சரத்பவாரின் மருமகன் அஜித் பவாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர், ‛‛நாட்டின் பிரதமரும், ஒரு கட்சியின் தேசிய தலைவரும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக சந்தித்து இருக்கலாம்'' என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ‛‛மாநில சட்ட மேலவைக்கான 12 பேரின் பெயர் பட்டியலுக்கு மகாராஷ்டிரா ஆளுனர் நீண்டகாலமாக ஒப்புதல் வழங்கவில்லை. இதற்கு ஒப்புதல் அளிக்க சரத்பவார் வலியுறுத்தி இருக்கலாம்'' என்றார்.

பாஜக தரப்பு கூறுவது என்ன

பாஜக தரப்பு கூறுவது என்ன

பாஜக மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார் கூறுகையில், "தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தாலும் கூட இருகட்சியினர் இடையே எந்த பிரச்சனையையும் இல்லை என்பதை தான் இந்த சந்திப்பு காட்டுகிறது'' என்றார். மகாராஷ்டிரா சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் பிரவீன் தரேகர் கூறுகையில், ‛‛ தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சிவசேனா தலைவர்களிடமும் விசாரணை நடக்கிறது. இதனால் தான் சரத்பவார், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். ஆனால் ஊழல், முறைகேட்டை பிரதமர் சகித்து கொள்ளமாட்டார். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்'' என்றார். இருப்பினும் இந்த சந்திப்பின்போது மகாராஷ்டிரா மேலவை உறுப்பினர் நியமனம், சஞ்சய் ராவத் மீதான நடவடிக்கை குறித்து சரத்பவார் விரிவாக பேசியதாக சொல்லப்படுகிறது.

நிதின் கட்கரிக்கு விருந்து

நிதின் கட்கரிக்கு விருந்து

முன்னதாக நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு சரத்பவார் தனது டெல்லி வீட்டில் விருந்து கொடுத்தார். இதில் ஆளும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தவிர மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவரான நிதின் கட்கரியும் பங்கேற்றார். இதில் மகாராஷ்டிரா மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கபபட்டது என தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கூறப்பட்ட நிலையில் இன்று சரத்பவார், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல்

பாஜகவின் மூத்த தலைவராக நிதின் கட்காரிக்கு நேற்று இரவு விருந்து கொடுத்த நிலையில் இன்று சரத்பவார் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துள்ளார். விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் அதுதொடர்பான கேள்விகளையும் சிலர் எழுப்பி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+