கொடுமையை பாருங்க.. இந்தியாவில் போராடுவது, கருத்து சொல்வது சட்ட விரோதமாகிவிட்டது- ராகுல் காந்தி கோபம்
டெல்லி: இந்தியாவில் போராட்டம் செய்வது, கருத்து கூறுவது அனைத்தும் சட்டவிரோதம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாடம் உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி நேற்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.

கறுப்பு சட்டை போராட்டம்
இதனைத்தொடர்ந்து நேற்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பாஜக அரசின் தவறுகளை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார். பின்னர் நாடாளுமன்றத்தில் பாஜக அரசின் கொள்கைகள், பணவீக்கம், விலைவாசி உயர்வுக்கு எதிராக சோனியா காந்தி தலைமையில் கறுப்பு சட்டை அணிந்து காங்கிரஸ் கட்சி எம்பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் பேரணி
இதன்பின்னர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். இந்தப் பேரணியில் சசி தரூர், கேசி வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியினர் விஜய் சோக் பகுதியில் பேரணியாக சென்ற போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.

பிரியங்கா கைது
இதேபோல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க ஏராளமான தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பிரியங்கா காந்தி, தடுப்புகளில் ஏறி குதித்து ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டார். இவரை காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்த போது, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். பின்னர் அவரை குண்டுகட்டையாக தூக்கிய போலீசார், தரையில் இழுத்து சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.

ராகுல் காந்தி விமர்சனம்
இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி-க்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், இந்தியாவில் போராட்டம் செய்வது, கருத்து கூறுவது என எல்லாம் சட்டவிரோதம். ஆனால், பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று விமர்சித்தார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications