இந்தியா, பாகிஸ்தான் யாரிடமிருந்து அதிக ஆயுதங்கள் வாங்குகிறார்கள் தெரியுமா? மாறிய வியூகங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமீபத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்திய ராணுவத்தின் பலத்தை உலகிற்கு உணர்த்தியது. இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகளின் நவீன ஆயுதங்களையும், நம்ம நாட்டுத் தயாரிப்புகளையும் இந்தியா திறமையாகப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, இஸ்ரேலுடன் சேர்ந்து உருவாக்கிய ஸ்கைஸ்ட்ரைக்கர் டிரோன், ரஷ்யாவின் பெச்சோரா, OSA-AK ஏவுகணைகள் இந்தியாவின் பலவிதமான ஆயுதக் களஞ்சியத்துக்குச் சான்று.

பாகிஸ்தானோ சீனாவின் PL-15 ஏவுகணைகள், துருக்கியின் டிரோன்களை நம்பியுள்ளது. இதனால், தெற்காசியாவின் பாதுகாப்பு வியூகங்கள் புதிய திருப்பத்தை எட்டியுள்ளன.

Pakistan china usa war

இந்தியா கொள்முதல்

ஸ்டாக்ஹோம் அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல்கள், கடந்த 10 வருஷத்துல இந்தியா, பாகிஸ்தான் ஆயுதம் வாங்குற விதத்துல பெரிய மாற்றங்கள் வந்திருப்பதை காட்டுகிறது. முன்னாடி ரஷ்யாவிடம்தான் இந்தியா அதிகமா ஆயுதம் வாங்கும். ஒரு கட்டத்துல 96.5% ஆயுதங்கள் ரஷ்யாவுடையதாக இருந்தது. ஆனா, இப்ப பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல்னு பல நாடுகள்ல இருந்து இந்தியா ஆயுதம் வாங்குது. ரஷ்யாவுடைய பங்கு குறைஞ்சு 75% ஆயிடுச்சு.

சீனா பக்கம் சாய்ந்த பாகிஸ்தான்

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அவங்க அமெரிக்காவை விட்டுட்டு சீனா கிட்ட அதிகமா ஆயுதம் வாங்குறாங்க. இப்ப 95% ஆயுதங்கள் சீனாவுடையதுதான். இது சீனாவுடைய செல்வாக்கு இந்தப் பகுதியில அதிகமாயிருக்கறதை காட்டுது. அமெரிக்காவுடைய பங்கு ரொம்ப குறைஞ்சு 0.85% ஆயிடுச்சு.

இந்தியா அபாரம்

சமீபத்திய தாக்குதல்கள்ல சில குறிப்பிட்ட ஆயுதங்களும், விமானங்களும் முக்கியமா இருந்துச்சு. இந்திய விமானப்படை பாகிஸ்தான்ல இருந்த தீவிரவாத முகாம்களை துல்லியமா தாக்கி வானத்தையே கட்டுப்படுத்தியது. இது போர்ல விமானப்படையோட முக்கியத்துவத்தையும், நம்ம நாட்டோட பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா வான்வெளியை வெற்றிகரமா பயன்படுத்தியதையும் காட்டுகிறது.

வான்படை

வான்படைக்கான ஆயுதங்களை மட்டும் பார்த்தா, இந்தியா ரஷ்யாவை சார்ந்து இருப்பது மேலும் குறைந்துள்ளது. இப்ப 55%க்கும் அதிகமான வான்படை ஆயுதங்கள் பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல் கிட்ட இருந்துதான் வாங்குறோம். ஆனா, பாகிஸ்தான் அவங்களுடைய வான்படை ஆயுதங்களுக்காக சீனாவைத்தான் நம்பியிருக்காங்க.

உலக அளவில் அமெரிக்கா டாப்

உலக அளவுல அமெரிக்காதான் அதிகமா ஆயுதம் ஏற்றுமதி பண்றாங்க. ஆனா ரஷ்யாவுடைய பங்கு குறைஞ்சிருச்சு. சீனா குறைவான ஆயுதங்கள்தான் ஏற்றுமதி பண்ணாலும், பாகிஸ்தானுக்கு அதிகமா கொடுக்குறாங்க. அது சரி, சீன தயாரிப்பு குவாலிட்டியாக இருக்கும் என்று பாகிஸ்தானை தவிர இந்த உலகில் யார்தான் நம்புவார்கள்?

இந்த ஆயுதக் கொள்முதல் விவரங்கள், உலக பாதுகாப்பு வணிகத்துல மட்டும் இல்லாம, தெற்காசிய நாடுகள் ஆயுதம் வாங்குறதுல செஞ்சிருக்கற முக்கியமான மாற்றங்களையும் காட்டுது. அரசியல் சூழ்நிலைகள் மாறும்போது, இந்தியா, பாகிஸ்தான் எடுக்கிற முடிவுகள் இந்தப் பகுதியோட பாதுகாப்புக்கும் அமைதிக்கும் ரொம்ப முக்கியம்.

மாற்றம் மாறாதது

சுருக்கமா சொன்னா, உலக ஆயுத வணிகமும், பிராந்திய பாதுகாப்பு வியூகங்களும் மாறிக்கிட்டே இருக்கு. இந்தியா, பாகிஸ்தான் அவங்களுடைய தேவைக்கு ஏத்த மாதிரி ஆயுதங்களை வாங்கிக்கிறாங்க. இந்த நாடுகள் எடுக்கிற முடிவுகள் பிராந்திய மற்றும் உலக பாதுகாப்புக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்னு பார்க்க வேண்டியது முக்கியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+