ஆகஸ்ட் 14ம் தேதி பிரிவினை பயங்கரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி : ஆகஸ்ட் 14ம் தேதி இனி பிரிவினை பயங்கரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இந்தியாவில் இருந்து பிரிந்தது. ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலை இந்தியாவிற்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது,

ஆனால் மத வாரியாக நாடு பிரிந்த அந்த சமயத்தில் மிகப்பெரிய கலவரங்கள் வெடித்தது. வங்காளம், சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தான் என அன்றைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய கலவரங்கள் அப்போது வெடித்தன. இந்த கலவரத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் உறவுகளை இழந்தனர். உடமைகளை இழந்தனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பலர் அடித்துவிரட்டப்பட்டனர்.
ஒரு பக்கம் கொண்டாட்டங்கள் இருந்த நிலையில் மறு பக்கம் பிரிவினை கலவரம் மக்களிடையே ஆறாத துயரத்தை ஏற்படுத்தியது. வட மாநிலங்களில் அந்த கலவரத்தின் தாக்கம் இன்றவும் உள்ளது. இந்த கலவரத்தில் சிதறிய மக்கள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள்.
இந்நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி இனி பிரிவினை பயங்கரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரிவினையின் பொழுது உயிர் தியாகம் செய்த இந்தியர்களின் தியாகங்களை போற்றுவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications