Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1.93 லட்சம் கோடிக்கு வெளிநாட்டு ஆயுதங்கள் இறக்குமதி! மேக் இன் இந்தியா என்னாச்சு? அரசின் விளக்கம்

2018ம் ஆண்டு முதல் தற்போது வரை இறக்குமதி செய்யப்பட்ட ராணுவ தளவாடங்களில் அதிகபட்சமாக 2020-21ம் ஆண்டு மட்டும் ரூ.43,916 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்தியா வெளிநாடுகளிலிருந்து சுமார் ரூ.1.93 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை வாங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு தேவையான ஆயுதங்களையும், ராணுவ தளவாடங்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியிருந்த நிலையில் தற்போது வெளிநாட்டிலிருந்து ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் 'மேக் இன் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் உள்நாட்டுக்கு தேவையானவை மட்டுமல்லாது வெளிநாட்டுக்கு தேவையானவற்றையும் நம்மால் உற்பத்தி செய்து கொடுக்க முடியும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், கடந்த 2017-18ம் ஆண்டு முதல் இந்தியா எந்த அளவுக்கு வெளிநாட்டு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்திருக்கிறது என்று மக்களவையில் எதிர்க்கட்சியால் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஜூனியர் பாதுகாப்பு அமைச்சர் அஜய் பட், மேற்குறிப்பிட்ட விவரங்களை கூறியுள்ளார்.

 இறக்குமதி

இறக்குமதி

அவர் கூறியுள்ள பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "கடந்த 2017-18ம் ஆண்டு முதல் தற்போது வரை ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய சுமார் 264 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் 88 ஒப்பந்தங்கள் வெளிநாட்டினுடையதாகும். அந்த வகையில், 2017-18ம் ஆண்டில் ரூ.30,677 கோடிக்கும், 2018-2019ம் ஆண்டு ரூ.38,116 கோடிக்கும், 2019-20ம் ஆண்டு ரூ.40,330 கோடிக்கும், 2020-21ம் ஆண்டு ரூ.43,916 கோடிக்கும், 2021-2022ம் ஆண்டு ரூ.40,840 கோடிக்கும் வெளிநாட்டிலிருந்து ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

 ரஃபேல்

ரஃபேல்

இந்த பட்டியலில் 2016ம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமானம் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை. இவ்வளவு அதிகமாக ராணுவ தளவாடங்கள் வாங்கியிருந்தாலும் கூட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆத்மநிர்பார் பாரத் மற்றும், மேக் இன் இந்தியா ஆகிய திட்டங்களை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதால் இறக்குமதி குறைந்திருக்கிறது. தற்போது கூட ரூ.73,943 கோடி மதிப்பில் 55 'மிஷன் மோட்' திட்டங்களில் டிஆர்டிஓ (DRDO) செயல்பட்டு வருகிறது.

 ஆயுதங்கள்

ஆயுதங்கள்

இந்த திட்டத்தின் மூலம் நீர்மூழ்கி கப்பல்கள், போர் அறைகள், டார்பிடோக்கள், போர் விமானங்கள், கப்பல் ஏவுகணைகள், ட்ரோன்கள், தாக்குதல் துப்பாக்கிகள், போர்க்கப்பல்கள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள், ராக்கெட்டுகள், பீரங்கிகள், போர் வாகனங்கள், தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், விமானநிலைய எதிர்ப்பு ஆயுதங்கள் ஆகியவைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன" என கூறியுள்ளார். இந்த உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் நிதியை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது.

 பட்ஜெட்

பட்ஜெட்

கடந்த ஆண்டு இத்துறைக்கு ரூ.5.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.5.93 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதன்முறையாக அக்னிபாத் திட்டத்திற்கு ரூ.4,266 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்திய விமான படைக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.0.57 லட்சம் கோடி(3.6% அதிகரிப்பு) உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு 0.37 லட்சம் கோடியும்(15% உயர்வு), கடற்படைக்கு 0.52 லட்சம் கோடியும், ஓய்வூதியங்களுக்காக 16 சதவிகிதமும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விமானப்படைக்குதான் அதிக அளவு நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது என்பது குறுப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+