இந்தியாவில் 2023ம் ஆண்டு பாஸ்போர்ட் பெற்றவர்கள் 1.37 கோடி பேர்.. கேராளா டாப்! 4வது இடத்தில் தமிழ்நாடு
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் பாஸ்போர்ட் பெற்றவர்கள் எண்ணிக்கை 1.37 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிக அளவில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் என்ணிக்கையில் கேரளா முதலிடத்திலும் மகாராஷ்டிரா 2-வது இடத்திலும் உள்ளது. தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளது.
வெளிநாடு பயணம் செய்ய பாஸ்போர்ட் கட்டாயம் தேவைப்படும். ஒரு நபர் குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான அடையாள சான்றாக பாஸ்போர்ட் உள்ளது. இந்தியாவில் பலரும் அடையாள சான்றாக கூட பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார்கள். இதனால்,வெளிநாடு செல்ல திட்டமில்லை என்றலும் கூட பாஸ்போர்ட் எடுக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பாஸ்போர்ட்டில் ஒருவரை பற்றி முழு தகலும் இடம் பெற்றிருக்கும். வெளிநாட்டிற்கு செல்கிறோம் என்றால் சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் நாட்டிற்கு வரும் நபர்களின் விவரங்களை பாஸ்போர்ட் மூலம் அறிந்து கொள்ள முடியும். பாஸ்போர்ட் பெற நாம் மத்திய அரசின் இணையதளத்தில் www.passportindia.gov.in விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
4வது இடத்தில் தமிழ்நாடு: சமீப காலமாக நாட்டில் பாஸ்போர்ட் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் 1.37 கோடி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 37,700 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு இருப்பதை இது காட்டுகிறது. மத்திய வெளியுறவு அமைச்சகம் அளித்த டேட்டாக்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.
நாட்டிலேயே அதிக பாஸ்போர்ட் பெறுபவர்கள் லிஸ்டில் கேரளா முதலிடம் வகிக்கிறது. கேரளாவில் மட்டும் 15.47 லட்சம் பேர் கடந்த ஆண்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் 15.10 லட்சம் பேரும் உத்தர பிரதேசத்தில் 13.68 லட்சம் பேரும் பாஸ்போர்ட் வாங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் 11.47 லட்சம் பேர் வாங்கியுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 5-வது இடத்தில் பஞ்சாப் உள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு: பஞ்சாபில் கடந்த ஆண்டு 11.94 லட்சம் பேர் பாஸ்போர்ட் வாங்கியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டில் 1.17 கோடி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு 73 லட்சத்திற்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு இருந்தது. பாஸ்போர்ட் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதற்கு பல்வேறு காரணிகள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் வழங்கும் காலம் 21 நாட்களாக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் வெறும் 6 நாட்களாக குறைக்கப்பட்டது. பாஸ்போர்ட் பெறுவதற்கான கால அவகாசம் ஒருவாரத்திற்கும் கீழாக குறைந்ததே முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி, உலகமயமாக்கல் அதிகரிப்பது ஆகிய காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக பாஸ்போர்ட்டிற்கான தேவை அதிகரித்து இருக்கிறது. பெரு நகரங்களில் மட்டும் இன்றி சிறிய நகரங்களிலும் கூட தற்போது பாஸ்போர்ட் தேவை அதிகரித்து இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்!












Click it and Unblock the Notifications