இந்தியாவுக்கு நேர்ந்த அநீதி! உலக வரைபடத்தில்.. உண்மையான அளவை விட சிறியதாக காட்டப்பட்டது ஏன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக வரைபடத்தில் இந்தியாவின் உண்மையான சைஸை சுருக்கி காட்டப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது இந்தியா அதன் உண்மையான அளவுடன் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இருப்பினும் இதற்கு முன்னர் இந்தியாவுக்கு ஏன் இந்த அநீதி நடந்தது என்பது கேள்வியாக இருக்கிறது.

ஆரம்ப காலத்தில், உலக வரைப்படத்தை வரை நம்மிடம் அவ்வளவு டெக்னாலஜி எல்லாம் கிடையாது. ஆனால், கடல் தாண்டி கண்டிப்பாக பயணம் செய்தே ஆக வேண்டும்.

India

பயணம் செய்ய வேண்டும் எனில் மேப் அவசியம். எனவேதான் அப்போது நமக்கு தெரிந்த விஷயங்களை வைத்து.. அதாவது 1569ம் ஆண்டு ஒரு உலக மேப் உருவாக்கப்பட்டது. 'மெர்கேட்டர் ப்ரொஜெக்ஷன்' என்கிற முறையில் இந்த மேப் உருவாக்கப்பட்டது. பூமி உருண்டை வடிவத்தில் இருக்கிறது. 3D வடிவம் கொண்ட இந்த உலகத்தை 2D வடிவம் கொண்ட பேப்பரில் வரைவதற்கு பெயர்தான் மெர்கேட்டர் ப்ரொஜெக்ஷன். இந்த மேப்பில் திசைகள் 100% துல்லியமாக இருக்கும். அதேபோல கடல் பயணத்திற்கு ஏற்றது. ஆனால், நாடுகளின் சைஸ்தான் இஷ்டத்திற்கு இருக்கும்.

பூமிக்கு குறுக்குவெட்டாக ஒரு கோடு.. அதற்கு பெயர்தான் பூமத்திய ரேகை! இந்த ரேகைக்கு பக்கத்தில் இருக்கும் நாடுகள்.. இந்தியா, ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா போன்றவை சிறியதாகவும்.. இந்த கோட்டிலிருந்து மேலே மற்றும் கீழே செல்லும் இடங்களில் உள்ள அமெரிக்கா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகள் பெரியதாகவும் வரையப்பட்டிருக்கும். இதை பார்க்கும்போது.. அட ஆமா நம்ம நாடு சின்னதா தான் இருக்கு என்கிற உணர்வு குழந்தைகளுக்கு வரும். உண்மையில், இந்தியா பெரிய சைஸ் நாடுதான். இருந்தாலும் மெர்கேட்டர் ப்ரொஜெக்ஷன் மேப்-ஐ நாம் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததால், இந்தியாவின் சைஸும் சிறியதாகவே நமக்கு தெரிந்திருக்கிறது.

இந்த பிரச்சனைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, கடந்த 2018ம் ஆண்டு 'ஈகுவல் எர்த்' என்கிற முழக்கம் ஐநா சபையில் முன்வைக்கப்பட்டது. உலக நாடுகள் உள்ளது உள்ளபடியே மேப்பில் காட்சிப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். அதன்படி, இந்த கோரிக்கையை தற்போது ஐநா ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே, இந்தியாவின் உண்மையான அளவு இனி உலக வரைபடத்தில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+