நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்..உலகில் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்!
டெல்லி: ஆப்ரேஷன் சிந்தூர் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தியாவின் செல்வாக்கு ஆசியாவில் மட்டுமல்ல, உலக அளவில் உயர்ந்திருக்கிறது. தற்போது உலக அளவில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய சக்தி வாய்ந்த நாடாக இந்தியா முன்னேறி உள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரபல ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆசியா பவர் இன்டெக்ஸில் 'மேஜர் பவர்' பட்டத்தையும் இந்தியா அடைந்திருக்கிறது.
ஆசியாவில் இந்தியாவின் செல்வாக்கு கடந்த சில ஆண்டுகளாக நிலையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக 2025-ஆம் ஆண்டில் இந்தியா பெற்ற முன்னேற்றம், நாட்டை "மேஜர் பவர்" என்ற முக்கியமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்று ஆஸ்திரேலியாவின் பிரபல ஆராய்ச்சி அமைப்பு Lowy Institute வெளியிட்ட 'Asia Power Index - 2025' மதிப்பீடு தெரிவிக்கிறது.
அமெரிக்கா, சீனா ஆகியவற்றுக்குப் பின்னர் இந்தியா தற்போது ஆசியாவின் மூன்றாவது மிகச் சக்திவாய்ந்த நாடு என்ற தரவரிசைக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கு அனைத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

சக்தி வாய்ந்த நாடுகள்
2025 மதிப்பீட்டில், அமெரிக்கா 80.4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சீனா 73.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அதற்கு அடுத்ததாக இந்தியா 40 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. ஜப்பானை விட இந்தியா தனது முன்னிலையை இன்னும் அதிகரித்துள்ளது என்றும் ஆய்வு கூறுகிறது. இந்தியாவின் இந்த உயர்விற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது 'Operation Sindoor 'எனப்படும் இராணுவ நடவடிக்கை தான். 2025 மே மாதத்தில் நடைபெற்ற இந்த ஆபரேஷனில், இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளில் உள்ள பாதாள தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது.
இந்தியாவின் சக்தி
இந்த தாக்குதல்களில் பல முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டன. தாக்குதல்களின் தீவிரத்தால் பாகிஸ்தான் DGMO இந்தியாவை தொடர்புகொண்டு உடனடி சமாதான பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் ஏற்பட்டது. இந்தச் சம்பவம், இந்திய இராணுவத்தின் திறமை, நுண்ணறிவு மற்றும் செயல்திறனை உலக அளவில் உயர்த்தியதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனுடன் சேர்த்து, இந்தியாவின் பொருளாதார திறனும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவு இன்னும் பலப்படாத நிலையிலிருந்தாலும், உலகளாவிய முதலீடுகளில் இந்தியா சீனாவை முந்தி இரண்டாவது பெரிய முதலீட்டு தலமாக மாறியுள்ளது.
ஆசிய தரவரிசை
அமெரிக்காவுக்குப் பிறகு அதிக முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா அமைந்துள்ளது. இது, உலகளாவிய சப்ளை செயின் மாற்றங்களும், இந்தியாவின் வளர்ச்சியடைந்த உள்கட்டமைப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தூதரக செல்வாக்கும் இந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. பல நாடுகளுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் அதிகரித்துள்ளன. இந்தியாவின் தூதரக சேவை தரம் மேம்பட்டு வருகிறது என நிபுணர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், மக்கள் இயக்கம், விமான சேவை விரிவாக்கம், ஆசிய நாடுகளுடன் கலாசார இணைப்பு போன்ற காரணங்களால் இந்தியாவின் கலாசார செல்வாக்கும் அதிகரித்துள்ளது.
சக்திமிகுந்த நாடு
ஆனால் ஒரே நேரத்தில், இந்தியா மற்றும் சீனா இடையேயான structural gap அதாவது அமைப்பு சார்ந்த வித்தியாசம் இன்னும் அதிகமாகவே உள்ளது. சீனாவின் இராணுவ திறன், பொருளாதார முன்னிலை மற்றும் ஆசிய நாடுகளில் அதன் தூதரக செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்காவின் ஆசிய கொள்கையில் உருவாகி வரும் ஐயப்பாடுகள் காரணமாக சீனாவுக்கு கூடுதல் ஆதாயம் கிடைத்துள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான இந்த ஆசியா பவர் இன்டெக்ஸ், ஆசியாவில் உள்ள 27 நாடுகள் தொடர்பான 131 அளவுகோள்களை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னேற்றம்
இராணுவ திறன், பொருளாதார திறன், தூதரக செல்வாக்கு, கலாசார தாக்கம், வளங்கள், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் போன்ற பல அம்சங்கள் இதில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. மொத்தத்தில், 2025 இந்தியாவுக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்தியா ஆசியாவின் மூன்றாவது பெரிய சக்தி என்ற நிலையை வலுபடுத்திக்கொண்டதோடு, "மேஜர் பவர்" என்ற உலகளாவிய அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. முன்பு இல்லாத வகையில் இந்தியாவின் பொருளாதாரம், இராணுவம், தூதரகம், கலாசாரம் என அனைத்துப் பரிமாணங்களிலும் வேகமான முன்னேற்றம் கண்டுள்ளது என்கிறது அந்த ஆய்வு முடிவுகள்.












Click it and Unblock the Notifications