"பிரிக்ஸ் கரன்சி வேண்டாம்.. டாலரே இருக்கட்டும்.." அதிர்ச்சி கொடுத்த இந்தியா.. என்ன காரணம் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2026ஆம் ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா அந்த அமைப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் டாலர் நீக்கம் என்ற திட்டத்தில் இருந்து இந்தியா விலகியே நிற்கிறது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைப்பதை ஒரு முக்கியமான திட்டமாக முன்னெடுத்து வரும் நிலையில், இந்தியா அதற்கு பதிலாக வேறு பாதையைத் தேர்வு செய்துள்ளது.

பிரிக்ஸ் மாநாடு இப்போது டெல்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்க உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். 2006ம் ஆண்டு வெறும் 4 நாடுகளுடன் தொடங்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பில், இப்போது மொத்தம் 11 நாடுகளுடன் உலகின் முக்கியமான அமைப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

India BRICS Common Currency BRICS

டாலர்

நீண்ட நாட்களாகவே பிரிக்ஸ் அமைப்பு dedollarisation என்பதை வலியுறுத்தி வருகிறது. அதாவது இப்போதும் சர்வதேச வர்த்தகத்திற்கு டாலர் தான் பொதுவான கரன்சியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், டாலரை நீக்கிவிட்டு வேறு ஒரு கரன்சியை கொண்டு வர வேண்டும் என்பதே பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. சில ஆண்டுகளாகவே இது குறித்த விவாதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆனால், இந்தியா இதில் மட்டும் இதர பிரிக்ஸ் நாடுகளிடம் இருந்து சற்று விலகியே நிற்கிறது. அதாவது டாலரை கைவிட்டு பிரிக்ஸ் நாடுகளுக்கென தனி நாணயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு இந்தியா ஆதரவு அளிக்கவில்லை. அதேநேரத்தில் டாலர் மீதான சார்பை குறைக்கும் முயற்சிகளில் இருந்து முழுமையாக விலகவுமில்லை. இதற்காக மத்திய வங்கிகளின் டிஜிட்டல் கரன்சிகளை இணைத்து, வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடர்பான பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் திட்டத்தை இந்தியா முன்வைக்கிறது.

இந்தியா

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இது குறித்து விளக்கியிருந்தார். அதாவது டாலரை குறிவைப்பது இந்தியாவின் பொருளாதார, அரசியல் கொள்கையின் ஒரு பகுதியாக இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அதேநேரம் டாலர் மீதான சார்பை குறைக்க வேண்டும் என்பதிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பிரிக்ஸ் அமைப்பு விரிவடைந்தபோதும் இந்தியா இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் 2024ஆம் ஆண்டுக்கு பிறகு பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ளன. இந்த நாடுகளுக்கும் டாலர் ஆதிக்கம் குறித்து பல்வேறு காரணங்களால் அதிருப்தி இருந்தாலும், பிரிக்ஸ் நாணயம் உருவாக்கும் திட்டத்தில் இந்தியா முழுமையாக இணைந்துவிடவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் டாலர் சார்பை குறைக்க வேண்டும்.. அதேநேரம் முழுமையாக டாலரை ஒதுக்கிவிட்டு புதிய நாணயத்தை உருவாக்குவதிலும் இந்தியாவுக்கு ஆர்வமில்லை.

பிரிக்ஸ் நாணயம் ஏன் சாத்தியமில்லை?

இதற்கு முக்கிய காரணம் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதார மற்றும் அரசியல் வேறுபாடுகளாகும். ஒரே நாணயத்தை உருவாக்குவதற்கு வலுவான நிதி மற்றும் அரசியல் ஒருங்கிணைப்பு தேவை. இருப்பினும் பிரிக்ஸ் நாடுகளிடம் அத்தகைய ஒருங்கிணைப்பு இல்லை. இதுபோன்ற ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில், பொதுவான நாணயத்தை உருவாக்குவது சரியாக இருக்காது என்பதே வல்லுநர்கள் கருத்து.

இந்தியாவின் திட்டம்

புதிய நாணயத்தை உருவாக்குவதற்கு பதிலாக.. பிரிக்ஸ் நாடுகளின் மத்திய வங்கிகள் வெளியிடும் டிஜிட்டல் கரன்சிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி முன்வைத்துள்ளது. இதன் நோக்கம் டாலரை அழிப்பது அல்ல. மாறாக எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா பரிவர்த்தனைகளில் ஏற்படும் செலவு, தாமதம் மற்றும் சிக்கல்களை குறைப்பதே ஆகும்.

சிக்கல் என்ன

இந்தியா ஏற்கனவே ரஷ்யாவுடன் ரூபாயில் வர்த்தகம் செய்ய முயன்றபோது ஒரு முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டது. அதாவது நாம் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கினோம். இதனால் ரஷ்யாவிடம் ரூபாய் குவிந்தது. இருப்பினும், அவர்களால் இந்தியாவிடம் இருந்து அந்தளவுக்கு பொருட்களை வாங்க முடியவில்லை. இதனால் ரஷ்யாவிடம் ரூபாய் குவிந்த நிலையில், அந்த பணத்தை இந்திய அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற பிரச்சினையை தவிர்க்க, மத்திய வங்கிகளுக்கு இடையிலான கரன்சி ஸ்வாப் ஒப்பந்தங்களே தீர்வாக இருக்கும் என இந்தியா கருதுகிறது.

இந்தியாவின் மற்றொரு பெரிய சிக்கல் பிரிக்ஸ் நாடுகளுடனான வர்த்தக பற்றாக்குறை. பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 226 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. அதாவது இந்தியா பிரிக்ஸ் நாடுகளிடம் இருந்து வாங்குவது, அந்த நாடுகளுக்கு விற்பதைவிட அதிகமாக உள்ளது. இத்தகைய சூழலில் ரூபாய் அல்லது வேறு உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் செய்தாலும், ஒரு நாட்டிடம் மற்றொரு நாட்டின் நாணயம் அதிகமாக குவியும் பிரச்சினை தொடரும்.

தீர்வு என்ன

இதனால் தான் இந்தியா ஒரே ஒரு மாற்று கரன்சியை உருவாக்குவதற்கு பதிலாக பல அடுக்கு அணுகுமுறையை பின்பற்ற விரும்புகிறது. டாலர் பயனுள்ளதாக இருக்கும் இடங்களில் தொடர்ந்து டாலரை பயன்படுத்துவது, பொருத்தமான துறைகளில் உள்ளூர் நாணயப் பரிவர்த்தனையை அதிகரிப்பது, பிரிக்ஸ் நாடுகளுடனான இடங்களில் கரன்சி ஸ்வாப் ஒப்பந்தங்களை பயன்படுத்துவது என பலகட்ட தீர்வை இந்தியா விரும்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+