இந்தியாவில் 4 லட்சத்தை எட்டப்போகும் கொரோனா மரணங்கள் - இன்று புதிதாக 1,005 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவில் ஒரேநாளில் 61,588 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். மருத்துவமனைகளில் சிகிக்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,23,257 பேராக குறைந்துள்ளது.
டெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் 4 லட்சத்தை எட்டப்போகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,005 பேராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,99,459 பேராக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்றாலும் மொத்த கொரோனா பாதிப்பு 3,04,11,634 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் கொரோனா தொற்றிலிருந்து 61,588 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,94,88,918 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஒரு லட்சத்துக்கும் கீழ் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 20 நாட்களாக கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 1005 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,99,459 ஆக உயர்ந்துள்ளது. மரணமடைபவர்களின் விகிதமும் குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவமனைகளில் 5,23,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரைக்கும் 33,57,16,019 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா முதல் அலையில் தப்பிய இந்தியா இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது. 4 லட்சம் பேரை பலி கொண்டுள்ளது கொரோனா இரண்டாவது அலை. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கவனத்துடன் இருந்தால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications