டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய நட்சத்திரக் கூட்டம்...வானில் ஒரு அதிசயம்..பிரபஞ்சத்தின் முதல் ஒளியா?

Google Oneindia Tamil News

டெல்லி: பூமியில் இருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களை புனேவில் இருக்கும் வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழக அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இது இந்தியா வானியல் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்தியா மற்றும் கனடாவில் இருக்கும் பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் மூலம் உருவாக்கப்பட்டது ஆஸ்ட்ரோசாட். இந்த சாட்டிலைட் 2015 ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதில் பொருத்தப்பட்டு இருக்கும் எக்ஸ்ரே, புற ஊதாக்கதிர்கள் மூலம் வானில் இருக்கும் சிறப்புகளை ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்து அனுப்பும். வானின் சிறப்புக்களை படம்பிடிக்கும் வகையில் கூடுதல் எடைகளை தாங்கும் வகையில் ஐந்து பெலோடுகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன.

India’s AstroSat Discovers An Ancient Galaxy; thiw will help to find Origin of Light

இதில் பொருத்தப்பட்டு இருக்கும் கருவிகள் வானில் இருந்து வரும் புறஊதாக் கதிர்களை படம் பிடிக்கும். இது பிரபஞ்சத்தின் முதல் ஒளியை கண்டறிவதற்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது நட்சத்திரக் கூட்டம் இருக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்கள் முன்பே இருப்பது தெரிய வந்துள்ளது.

நாசா அனுப்பி இருந்த Hubble Space Telescope மூலம் இந்த புறஊதாக் கதிர்களை படம் பிடிக்க முடியவில்லை. ஆனால், புனேவின் வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழகம் அனுப்பி இருந்த ஆஸ்ட்ரோசாட் அழகாக படம் பிடித்துள்ளது. ஆஸ்ட்ரோ சாட்டில் இருக்கும் யு.வி.ஐ.டி டிடெக்டரில் பின்னணி கிடைக்கும் இரைச்சல் Hubble Space Telescopeவுடன் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால் இது சாத்தியமானது என்று கூறப்படுகிறது.

2009-ஏப். 29-ல் அருந்ததியினருக்கு 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்2009-ஏப். 29-ல் அருந்ததியினருக்கு 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

ஆரம்பக்கால நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களின் உருவாக்கத்தை, பிரபஞ்சத்தில் காஸ்மிக் இருண்ட யுகத்தின் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒளி அல்லது கதிர்வீச்சின் ஆரம்ப கதிர்களுக்கு வழிவகுத்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது. மேலும் இந்த கண்டுபிடிப்பு மூலம் ஒளி வீச்சுக் கதிர்களையும் ஆராய்வதற்கு உதவுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
India’s AstroSat Discovers An Ancient Galaxy; thiw will help to find Origin of Light
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X