டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4வது நாளாக தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டிய கொரோனா தினசரி பாதிப்பு.. இந்தியாவில் ஜெட் வேகத்தில் வைரஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4ஆவது நாளாக 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,61,500 ஆகும். ஒரே நாளில் 1,501 பேர் பலியாகிவிட்டனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்தியாவில் 1.47 கோடி பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 18 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Indias daily covid count crosses 2 lakh cases for 4th day

கொரோனா வைரஸால் இறந்தோரின் எண்ணிக்கை 1.77 லட்சமாகும். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1.28 கோடியாகும். பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி மருத்துவர்கள், உயரதிகாரிகள், உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தினர் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

நேற்றைய தினம் இந்தியாவில் ஒரே நாளில் 2,34,692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 1,341 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 ஆம் தேதி 30 லட்சத்தையும் செப்டம்பர் 5-ஆம் தேதி 40 லட்சத்தையும் செப்டம்பர் 16-ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது.

எல்லாமும் இருக்காம்.. கொரோனா நோயாளிகளுக்குதான் பற்றாக்குறை போல..மத்திய அரசு மீது ப.சிதம்பரம் அட்டாக்எல்லாமும் இருக்காம்.. கொரோனா நோயாளிகளுக்குதான் பற்றாக்குறை போல..மத்திய அரசு மீது ப.சிதம்பரம் அட்டாக்

இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ஆம் தேதி 70 லட்சத்தையும், அக்டோபர் 29-ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20 -ஆம் தேதி 90 லட்சத்தையும் டிசம்பர் 19-ஆம் தேதி 1 கோடியையும் தாண்டியது.

இறந்தவர்களில் 70 சதவீதம் பேர் துணை நோயினால் இறந்துவிடுகிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 4ஆவது நாளாக 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

English summary
India's daily covid count cases crosses 2 lakhs for the 4th consecutive day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X