ஷாக்.. பிரபல ஈட்டி ஏறிதல் வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை! ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கம் வென்றவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 3 தங்க பதக்கங்களை வென்ற இந்திய வீரர் நீரஜ் யாதவ், தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 42 வயதான அவர், டெல்லியில் உள்ள தனது வீட்டில் விஷத்தை சாப்பிட்டதாக கூறப்படும் நிலையில், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் சமீபத்திய ஆண்டுகளில் பாரா விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்து வருகிறார்கள். ஒலிம்பிக், ஆசிய போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து வருகிறார்கள். அப்படி சர்வதேச அளவில் பதகங்களை பெற்ற ஒரு வீரர் மோசமான முடிவை எடுத்திருக்கிறார்.

India olympics

தற்கொலை

42 வயதான இந்திய பாரா இந்திய வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 3 முறை இந்தியாவுக்காக தங்க பதக்கங்களை வென்றுள்ளார். நீரஜ் யாதவ் உயிரிழந்த சம்பவத்தை இந்திய பாரா தடகள அணியின் தலைமை பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா உறுதிப்படுத்தியுள்ளார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

நீரஜ் யாதவ், பாரா ஈட்டி எறிதல் போட்டியில் எஃப்55 (F55) பிரிவில் பங்கேற்று வந்தார். இந்த மாத தொடக்கத்தில் ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியவில்லை. ஊக்கமருந்து தொடர்பான தடையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நீரஜ் யாதவின் மரணத்துக்கான என்ன காரணம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

வேதனை

இது குறித்து பேசிய இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் சத்யநாராயணா மேலும் கூறுகையில், "நீரஜ் தற்கொலை செய்துகொண்டார். இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு விளையாட்டு வீரர் வெற்றி, தோல்வி என இரண்டையும் சமமாக எதிர்கொள்ள வேண்டும். அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை" என்றார்.

3 முறை தங்கம்

இந்தியாவின் சிறந்த பாரா தடகள வீரர்களில் ஒருவரான நீரஜ் யாதவ், ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 2018ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். அதை தொடர்ந்து, 2023ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

போலியோ

இவருக்கு 7 வயதானபோது தான் போலியோ பாதிப்புக்கு பிந்தைய முடக்குவாதம் (Post-polio residual paralysis) இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் வீல்சேர் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்ட நீரஜ் யாதவ், பின்னர் பாரா தடகளப் போட்டிகளுக்கு மாறினார். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல சாதனைகளை படைத்தார். அப்படிப்பட்ட நீரஜ் யாதவ் இப்போது மோசமான முடிவை எடுத்திருக்கிறார். டெல்லியில் இப்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+