டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புத்தாண்டை "சிறப்பா" கொண்டாடிய இந்தியர்கள்.. பிரியாணிய விடுங்க, ஆணுறை விற்பனையும் உச்சம்! இதோ லிஸ்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: புத்தாண்டுக்கு முந்தைய நாளில் காண்டம் விற்பனை படுவேகம் எடுத்ததாகவும் அன்றைய தினம் மட்டும் டுரெக்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2,757 பாக்கெட்டுகள் விற்பனையானதாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தனது ட்விட்டரில் நேற்று பதிவிட்டு இருந்தது. இதற்கு மிகவும் சுவராசியமான முறையில் டுரெக்ஸ் நிறுவனம் பதில் கொடுத்துள்ளது.

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவில் அதிக விற்பனை செய்யப்பட்ட உணவு வகைகள் குறித்த பட்டியலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

அதில் சந்தேகமே இல்லாமல் அனைவரும் நினைப்பதைப் போலவே பிரியாணியே முதலிடம் பிடித்து இருந்தது. 3.5 லட்சம் பிரியாணிகள் புத்தாண்டுக்கு முந்தைய நாள் அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10.30க்குள் விற்பனையாகி இருந்ததாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

கேரளாவில் களைகட்டிய புத்தாண்டு! ஒரே நாளில் 107 கோடிக்கு மது விற்பனை! டஃப் கொடுப்பாங்க போலயே! கேரளாவில் களைகட்டிய புத்தாண்டு! ஒரே நாளில் 107 கோடிக்கு மது விற்பனை! டஃப் கொடுப்பாங்க போலயே!

டொமினோஸ் பிட்சா

டொமினோஸ் பிட்சா

அதேபோல் ஐதராபாத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் மட்டும் 15 ஆயிரம் ஆர்டர்கள் வந்து குவிந்ததாகவும் ஸ்விக்கி தெரிவித்து இருந்தது. அதேபோல புத்தாண்டுக்கு முந்தைய நாளில் டொமினோஸ் பிட்சா விற்பனையும் களை கட்டியிருந்தது. 61,287 டொமினோஸ் பிட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டு இருந்ததாகவும் சிப்ஸ் பக்கெட்டுகள் 1.76 லட்சமும் கிச்சடி உணவை 12,344 பேரும் ஆர்டர் செய்து இருந்ததாக ஸ்விக்கி கூறியிருந்தது.

காண்டம் விற்பனை அதிகம்

காண்டம் விற்பனை அதிகம்

அதேபோல், எந்த பிரியாணி அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டு இருக்கும் என்று கருத்துக்கணிப்பையும் ஸ்விக்கி நடத்தியது. இதில் சுமார் 75 சதவிகிதம் ஐதராபாத் பிரியாணியே என்று கூறியிருந்தனர். இதைத்தவிர வீட்டுக்கு தேவையான மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் அதிகம் விற்பனையான பொருட்கள் குறித்தும் ஸ்விக்கி நிறுவனம் பகிர்ந்து இருந்தது. அதில் சுவாரசியம் அளிக்கும் வகையில் காண்டம் விற்பனைகள் அதிகமாக இருந்தது தெரியவந்தது.

2,757 பாக்கெட்டுகள்

2,757 பாக்கெட்டுகள்

டுரெக்ஸ் என்ற பிரபலமான நிறுவனத்தின் காண்டம்கள் மட்டும் 2,757 பாக்கெட்டுகள் விற்பனையாகி இருந்ததாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தெரிவித்து இருந்தது. ஸிவிக்கி பதிவை போட்டதுமே நெட்டிசன்கள் பலரும் தங்கள் வழக்கமான பாணியில் கருத்துக்களை பதிவிடத் தொடங்கிருந்தனர். இந்த நிலையில், புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு காண்டம் விற்பனை அதிகமாக இருந்ததாக ஸ்விக்கி வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் டுரெக்ஸ் நிறுவனம் ட்விட் ஒன்றை போட்டுள்ளது.

புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள்

புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள்

அந்த ட்விட்டில் "அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டெலிவரி செய்ததற்கு நன்றி. குறைந்தபட்சம் 2,757-பேராவது புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள் என்று நம்புகிறோம். மறுநாள் காலையில் ஒன்றாக அவர்கள் காஃபியை ஆர்டர் செய்து இருப்பார்கள் எனவும் நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளது. டுரெக்ஸ் நிறுவனத்தின் இந்த ட்விட் பதிவு நெட்டிசன்களுக்கு வெறும் வாயில் அவல் கிடைத்தது போல ஆகிவிட்டது. இந்த பதிவுக்கு கீழே நெட்டிசன்கள் தங்கள் கருத்தை வாரிக்குவித்து வருகின்றனர்.

ஒருபாக்கெட்டிற்குள் 2 காண்டம்கள்

ஒருபாக்கெட்டிற்குள் 2 காண்டம்கள்

நெட்டிசன்கள் பலரும் ஒருபாக்கெட்டிற்குள் இரண்டு காண்டம்கள் இருக்கும் என்று குறிப்பிடும் வகையில் 5514 பேர் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள் என்று பதிவிட்டுள்ளனர். அதேபோல புத்தாண்டுக்கு முந்தைய நாளில் டொமினோஸ் பிட்சா விற்பனையும் களை கட்டியுள்ளது. 61,287 டொமினோஸ் பிட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது. சிப்ஸ் பக்கெட்டுகள் 1.76 லட்சமும் கிச்சடி உணவை 12,344 பேரும் ஆர்டர் செய்து இருந்ததாக ஸ்விக்கி கூறியிருந்தது.

English summary
Swiggy Instamart had posted on its Twitter yesterday that the sales of condoms took off on the eve of New Year and 2,757 packets of Durex India were sold on that day alone. Durex has answered this in a very interesting way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X