பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்..லடாக் கோக்ராவிலிருந்து படைகளை விலக்கி கொண்ட இந்தியா-சீன ராணுவம்
டெல்லி: 12-வது சுற்று பேச்சுவார்த்தையின் பலனாக லடாக் எல்லையில் கோக்ரா பகுதியில் இருந்து இந்திய-சீன ராணுவ வீரர்கள் பின் வாங்கி கொண்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் நமது நாட்டின் எல்லை பகுதிகளில் தொடர்ந்து அத்துமீறி வருகின்றன.
Recommended Video
ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவம் தனது வாடிக்கையாக வைத்துள்ளது.
இந்த வரிசையில் இந்த இணைந்து கண்ட சீனாவும் இந்திய எல்லையை அபகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அருணாச்சல பிரதேச மாநில எல்லையை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.

லடாக் எல்லையில் மோதல்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தினர் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் மூண்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர்.

பலகட்ட பேச்சுவார்தை
இதனை தொடர்ந்து லடாக் எல்லையில் பெரும் பதற்றம் உண்டானது. இதன் பின்பு லடாக் எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதனால் ஓரளவு நல்ல பயன் கிடைத்தது. பதற்றமான பகுதிகளில் கூடுதலாக குவிக்கப்பட்டு இருந்த இரு நாடு படை வீரர்களும், அவர்களின் ராணுவ டாங்கிகளும் விலக்கிக் கொண்டன. முதலில் 11 கட்ட பேச்சுவார்தைகள் நடந்தன.

நல்ல முன்னேற்றம்
இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையேயான 12-வது சுற்று பேச்சு நேற்று முன்தினம் சீனாவின் எல்லைக்குட்பட்ட மோல்டோ பகுதியில் நடந்தது. சுமார் ஒன்பது மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து தங்களது படைகளை விலக்கி கொள்ள முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு மிக நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.

கோக்ராவில் இருந்து விலகல்
அதாவது கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து இந்திய மற்றும் சீன படைகள் விலக்கிக் கொண்டுள்ளன. இரு நாட்டு ராணுவ வீர்களும் தங்களது நிரந்தர முகாம்களுக்கு திரும்பி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ' எங்களது பேச்சுவார்த்தைகள் நேர்மையானவை மற்றும் ஆக்கபூர்வமானவையாகும். மீதமுள்ள பிரச்சினைகளை ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப விரைவாக தீர்க்க இரு தரப்பு ராணுவ வீரர்களும் ஒப்புக் கொண்டனர்' என்று அவர் கூறினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications