ஆப்பிளின் பட்ஜெட் மாடல் ஐபோன் 16e.. இந்தியாவில் விற்பனை தேதி அறிவிப்பு! விலை எவ்வளவு தெரியுமா?
டெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் மலிவு விலை மாடலான ஐபோன் 16 E இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. 28 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஐபோன் விலை மிகவும் மலிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 128 ஜிபி வெர்ஷன் மாடலின் விலை 59,990 என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் செல்போன் விற்பனையில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் நிறுவனம் ஐபோன். செல்போன் சந்தையில் முன்னணி வகிக்கும் ஐபோன் ஆண்டுதோறும் தனது புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆப்பிள் நிகழ்ச்சியில் ஐபோன் 16 சீரிஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

பட்ஜெட் ஆப்பிள் ஐபோன்
இந்த நிலையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் ஐபோன் மாடலான iPhone 16e மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.1 இன்ச் OLED ஸ்கிரீன் வசதி கொண்ட இந்த ஐபோன் ஆப்பிளின் நுண்ணறிவு அம்சங்கள் சப்போர்ட் செய்யும். அதாவது, 2023ல் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15Pro மாடலில் உள்ள அம்சங்கள் இதில் உள்ளன.
விலை எவ்வளவு?
ஐபோன் 16 இ மாடலில் 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா உள்ளது. இதில் ஆக்ஷன் பட்டன் வசதியும் உள்ளது. ஐபோன் 16e மாடலின் விலை ஆரம்ப விலை ரூ.59,900 ஆகும். 128ஜிபி ஸ்டொரேஜ் உடன் இந்த விலைக்கு அறிமுகம் ஆகியுள்ளது. 256 ஜிபி, 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல்களின் விலை முறையே ரூ.69,900 மற்றும் ரூ.89,900 ஆகும். இந்த ஐபோன் மாடலின் முன்பதிவு நாளை (பிப்ரவரி 21) முதல் தொடங்குகிறது. விற்பனை வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில், இந்த ஐபோன்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
புதிய 16 இ மாடலில் இர்ண்டு சிம் கார்டுகள் (Nano+eSIM) போடும் வசதி உள்ளது. இயங்குதளம் iOS 18ல் இந்த மாடல் இயங்கும். டிஸ்பிளேவில் ஆப்பிளின் தனித்துவமன செராமிக் ஷீல்டு வசதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. RAM - குறித்து ஆப்பிள் நிறுவனம் எதுவும் குறிப்பிடவில்லை. எனினும், 8 ஜிபி RAM வசதி இந்த மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
12 + 48 மெகா பிக்சல் கேமரா
பின்பக்கம் 48 மெகா பிக்சல் கேமரா உள்ளது. ஆப்டிகல் இமேஜ் நிலைப்படுத்தல்(OIS)அம்சமும் இதில் உள்ளது. முன்பக்கம் 12 மெகா பிக்சல் கேமரா உள்ளது. செல்பிக்கள் மற்றும் வீடியோ கால்கள் வசதிக்காக சிறப்பாக இந்த ட்ரூடெப்த் அம்சத்துடன் இந்த கேமரா உள்ளது. முக அடையாளம் போன்ற அடிப்படை சென்சார் வசதிகளும் இதில் உள்ளன.
5G, 4G LTE, Wi-Fi 6, ஆகிய அம்சங்களும் இதில் உள்ளன. முந்தைய மாடல்கள் மாதிரி இல்லாமல் டைப் சி ஆப்ஷன் இதில் உள்ளது. 18 வாட்ஸ் வையர்டு சார்ஜிங் மற்றும் 7.5 வயர்லஸ் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.












Click it and Unblock the Notifications