டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிக்கிறேன்.. முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கியதில் மகிழ்ச்சி. தீர்ப்பை மதிக்கிறேன் என முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.

    டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கியதில் மகிழ்ச்சி. தீர்ப்பை மதிக்கிறேன் என முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக 70 ஆண்டுகளாக பிரச்சினை நடந்து வந்தது. இந்த நிலையில் சுமார் 40 நாட்களாக தினசரி அடிப்படையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    Iqbal Ansari welcomes the Supreme Courts final verdict

    இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கு சொந்தமானது. அதில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கியது. அது போல் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

    இந்த தீர்ப்பு குறித்து முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி கூறுகையில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கியதில் மகிழ்ச்சி. நீதிமன்றத் தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்றார்.

    அயோத்தி வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்திய தொல்லியல் ஆய்வு.. தீர்ப்பை தீர்மானித்தது இந்த அம்சம்தான்அயோத்தி வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்திய தொல்லியல் ஆய்வு.. தீர்ப்பை தீர்மானித்தது இந்த அம்சம்தான்

    இக்பால் அன்சாரி தனி நபராவார். வழக்கு தொடுத்தவர்களில் மிக முக்கியமானவரான முகமது ஹாசிம் அன்சாரியின் மகன் ஆவார். தந்தை 2016-இல் உயிரிழந்த பிறகு இந்த வழக்கை மகன் இக்பால் அன்சாரி தொடர்ந்து நடத்தி வருகிறார். டைலராக இருந்த ஹாசிம் அன்சாரி பாபர் மசூதி அருகே வசித்து வந்தார். வழக்கில் முதல் மனுதாரர் இவர்தான்.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    English summary
    Ayodhya Verdict: Iqbal Ansari, one of the litigants in Ayodhya case: I am happy that Supreme Court has finally delivered a verdict, I respect the judgement of the court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X