ஜாக்பாட்.. இவ்வளவு குறைந்த செலவில் துபாய், அபுதாபிய ரவுண்டடிக்கலாமா.. ஐஆர்சிடிசியின் அசத்தல் ஆஃபர்
பட்ஜெட் தொகையில் துபாய் மற்றும் அபுதாபிக்கு ஐஆர்சிடிசி சுற்றுலாவை ஏற்பாடு செய்திருக்கிறது
டெல்லி: சுற்றுலாவை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் பட்ஜெட் தொகையில் சுற்றுலா என்றால் யார்தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள். அப்படி பட்ஜெட்டில் சுற்றுலாவை பிளான் செய்பவர்களுக்கு 'ஐஆர்சிடிசி' தற்போது 'துபாய்க்கான' புதிய ஆஃபரை அறிவித்திருக்கிறது.
அதன்படி குறைந்த செலவில் கனவு நாடுகளில் ஒன்றான துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்று வரலாம். இதற்கான பெரும்பாலான செலவுகளை ஐஆர்சிடிசி ஏற்றுக்கொள்கிறது. இதற்கான அடிப்படை கட்டணம் ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்புறம் என்ன பெட்டிப் படுக்கைகளை கட்டுங்க.. துபாய்க்கு பறங்க! இந்த சுற்றுலா திட்டத்திற்கு 'திகைப்பூட்டும் துபாய்' என்று ஐஆர்சிடிசி பெயரிட்டுள்ளது. இதற்கான கட்டணம் வெறும் ரூ.1 லட்சம்தான்.
மொத்தம் 6 பகல் 5 இரவு என இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. டீலக்ஸ் பிரிவில் மார்ச் 23ம் தேதியன்று இந்த பயணம் தொடங்க இருக்கிறது. 23ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை சுற்றுலா செல்லலாம். மற்ற டூரிஸ்ட் ஏஜென்சிகளை விட ஐஆர்சிடிசி தற்போது அறிவித்துள்ள இந்த பேக்கேஜ் மலிவு விலையாகும். எனவே இதற்கான முன்பதிவுகள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன.

என்ன வேண்டும்?
சரி இந்த டூருக்கு போக என்னவெல்லாம் வேண்டும் தெரியுமா? முதலில் விசா. அதாவது இந்த விசா குறைந்தபட்சம் 6 மாத காலத்திற்கு செல்லுபடி ஆவதைபோன்று இருக்க வேண்டும். அடுத்தது கொரோனா தடுப்பூசி. ஆம் மக்களே துபாய்க்கு போவதற்கு முன்னாடி 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்கனும். தடுப்பூசி போட்டுக்காதவங்களுக்கும் டூர் போக வழி இருக்கு. அதாவது இவர்கள் துபாய் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் RT-PCR பரிசோதனை செய்திருக்க வேண்டும். இந்த பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே டூர் அழைத்துச் செல்லப்படுவார்கள். அதைவிட முக்கியம், இந்த நெகட்டிவ் ரிசல்ட்டை கையில் வைத்திருக்க வேண்டும்.

கட்டணம் எவ்வளவு
இப்போது நீங்கள் வைத்திருக்கும் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவுக்கு PAN கார்டும் அவசியம். அதேபோல மூன்று மாதங்களுக்குள் எடுத்த போட்டோவை 3.5x4.5cm என்கிற அளவில் ஸ்கேன் செய்து முன்பதிவுக்காக அப்ளை செய்ய வேண்டும். இதையெல்லாம் சேர்த்து கொடுத்தால் பயணத்திற்காக நீங்கள் 90% தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால் மீதமுள்ள 10% சதவிகிதம் மிகவும் முக்கியமானது. அதுதான் பயணத்திற்கான தொகை! இந்த தொகை ரூ.81,900லிருந்து தொடங்குகிறது. விமானத்தில் எகானமி வகுப்பில்தான் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். ஓகே நீங்கள் இப்போது பயணத்திற்கு முழுமையாக தயாராகிவிட்டீர்கள்.

எந்த செலவுகளை ஐஆர்சிடிசி ஏற்கும்?
அப்புறம் என்ன புறப்படலாம்தானே? ஹலோ பாஸ்! கொஞ்சம் இருங்க.. சில கூடுதல் தகவல்களை தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கும் ரொம்ப உதவியா இருக்கும். அதாவது இந்த பயணத்தில் விமான டிக்கெட் கட்டணம், 3 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதி, அங்கு பரிமாறப்படும் உணவு, அங்கிருந்து மிராக்கிள் கார்டன், பாலைவன சஃபாரி, ஸ்பெஷல் பார்பிக்யூ மற்றும் இந்திய உணவு வகைகள் கொண்ட இரவு உணவு விருந்து, பெல்லி டான்ஸ், தோவ் குரூஸ் கப்பல் பயணம், லேண்ட் குஸியர் பயணம், துபாய் மால், புர்ஜ்-அல்-கலீஃபா நுழைவு கட்டணம், ஷேக் சயீத் மசூதி இது தவிர அபு-தாபி நகர சுற்றுப்பயணம் என எல்லாவற்றையும் ஐஆர்சிடிசியே பார்த்துக்கொள்ளும்.

கூடுதல் செலவுகள் என்னென்ன?
ஆனால்! இது தவிர சில செலவுகளை நீங்கள் எதிர்கொள்ள கூடும். அதாவது நீங்கள் வேறு ஏதேனும் உணவு சாப்பிட வேண்டும் என்று விரும்பும்பட்சத்தில் அதற்கான செலவை நீங்கள்தான் ஏற்க வேண்டும். இது தவிர விமான நிலைய வரிகள், எரிபொருள் கூடுதல் கட்டணம், ஓட்டுநர்கள், வழிகாட்டிகள் போன்றவர்களுக்கு கொடுக்கப்படும் டிப்ஸ்கள் பயணிகளின் தனிப்பட்ட செலவுகளாகும். அதேபோல பார்ட்டியை என்ஜாய் செய்ய மது அருந்துவது, குளிர்பானங்கள் அருந்துவது பிற ஸ்பெஷல் உணவுகளை எடுத்துக்கொள்வது போன்ற செலவுகளை நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐஆர்சிடிசி இதற்கு 'ஜவாப்தாரி ஆகாது' என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications