டெல்லியின் பெயர் ‛இந்திரபிரஸ்தா' என விரைவில் மாற்றம்? அமித்ஷா கையில் கடிதம்.. பின்னணியில் மகாபாரதம்
டெல்லி: நம் நாட்டின் தலைநகராக டெல்லி உள்ளது. இந்நிலையில் தான் டெல்லியின் பெயரை ‛இந்திரபிரஸ்தா' என்று மாற்றம் செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது. இதுதொடர்பாக பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் கடிதம் எழுதி உள்ளார். இந்த பெயர் மாற்றத்தின் பின்னணியில் ‛மகாபாரதம்' உள்ளது. அதுபற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
நம் நாட்டின் தலைநகராக டெல்லி உள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் கடிதம் எழுதி உள்ளார்.

இவர் டெல்லியில் சாந்தினி சவுக் தொகுதியின் எம்பியாக உள்ளார். இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
டெல்லியின் பெயரை ‛இந்திரபிரஸ்தா' என மாற்றம் செய்ய வேண்டும். ஏனென்றால் டெல்லி அதன் பழமையான மற்றும் புகழ்பெற்ற பெயரான ‛இந்திரபிரஸ்தா' என்ற பெயரில் அழைப்பதே சிறப்பானதாக இருக்கும். இப்படி பெயர் மாற்றம் செய்வதன் மூலமாக டெல்லியை வரலாறு,
கலாசாரம் மற்றும் நாகரிக வேர்களுடன் மீண்டும் இணைக்கும். இந்த பெயர் மாற்றம் வெறும் தலைநகராக மட்டுமின்றி, இந்தியாவில் காலத்தால் அழியாத பாரம்பரியத்தின் அடையாளமாகவும் மாறும்.
டெல்லி என்பது மகாபாரதத்துடன் தொடர்புடையது. யமுனை நதிக்கரையில் பாண்டவர்கள் தான் இந்த நகரை உருவாக்கினர். இது மிகவும் வளமான இடமாக இருந்தது. தர்மம், நல்ல நெறிமுறைகளை பறைசாற்றிய நிர்வாகத்தை கொண்டிருந்தது. அதனை போற்றும் வகையில் பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும். நம் நாட்டின் அயோத்தி பிரயாக்ராஜ், உஜ்ஜைன் மற்றும் வாரணாசி போன்று டெல்லியையும் கலாசார , பண்பாட்டுடன் தொடர்புடைய வகையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் டெல்லியின் பெயரை ‛இந்திரபிரஸ்தா' என மாற்றம் செய்வது பொருத்தமாக இருக்கும். இந்த பெயர் மாற்றம் உலகத்துக்கு பெரிய மெசேஜை அனுப்பும். கலாச்சார ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும், இது சுற்றுலாவை மேம்படுத்தும், வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் டெல்லி பெயர் மட்டுமின்றி அங்குள்ள ரயில் நிலையம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவற்றுக்கும் ‛இந்திரபிரஸ்தா' என பெயர் சூட்ட வேண்டும்'' என கூறியுள்ளார்.
இந்த கடிதத்தின் நகலை அவர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மற்றும் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பி உள்ளார். இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசின் பிரதிநிதிகள், டெல்லி முதல்வர் ரேகா குப்தா சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும் இந்த கோரிக்கை என்பது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. சமீபத்தில் டெல்லி கலாச்சாரத்துறை அமைச்சர் கபில் மிஸ்ராவுக்கு, விஸ்வ இந்து பரிஷத் டெல்லி செயலாளர் சுரேந்திர குமார் குப்தாவும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். அதிலும்‛‛மகாபாரதத்தில் டெல்லி இந்திரபிரஸ்தா என அழைக்கப்பட்டுள்ளது. எனவே பழங்கால வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தும் வகையில் தலைநகர் டெல்லி பெயரை இந்திரபிரஸ்தா என மாற்ற வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications