33% இடஒதுக்கீடு! “அப்போ பாஜக ஓட்டு போட்டிருந்தா கதையே வேற” சொல்வது காங். எம்பி ஜோதிமணி! என்ன மேட்டர்
டெல்லி: மகளிர் அமைப்பினர், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் நீண்ட கால கோரிக்கையான மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இன்று முதல் வரும் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நிகழ்வுகள் அனைத்தும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாளான நாளை முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.

முதல் நாள் கூட்டத் தொடர் முடிந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1996ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அரசியலமைப்பு சட்டத்தின் 81வது பிரிவில் திருத்தத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடம், பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று முதல் முறையாக மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தது.
ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா தோல்வியடைந்தது. இதனையடுத்து இரண்டு முறை என 90களில் மொத்தம் 3 முறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் தோல்வியடைந்தது. இதனையடுத்து இதே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு மீண்டும் இந்த மசோதாவை தாக்கல் செய்தது. மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்பட்ட நிலையில் மக்களவையில் தோல்வியடைந்தது.
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் அப்போது இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த சூழலில் தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, "இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஏனென்றால். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது தலைவர் ராஜீவ் காந்தியின் கனவு. அதன் வெளிப்பாடாகத்தான் பஞ்சாயத்து ராஜ் மகளிர் காண இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. இப்படியான இட ஒதுக்கீடு இல்லையெனில் நானே இன்றைக்கு நாடாளுமன்றத்துக்கு வந்திருக்க முடியாது.
சாதாரண குக்கிராமத்தில் இருந்து வந்த எனக்கு உள்ளாட்சித் தேர்தல் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது ராஜீவ் காந்தியின் கணவால் தான். பஞ்சாயத்தில் இருந்து தான் இன்றைக்கு நான் பாராளுமன்றத்திற்கு வந்திருக்கிறேன். பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது காங்கிரஸ் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய கனவாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் பிரதமரான மன்மோகன் சிங் அவர்கள் தான் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் மக்களவையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதை எதிர்த்து வாக்களித்தனர். எனவே போதிய பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது. இருப்பினும் கடந்த 9 ஆண்டு காலமாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக அரசை சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இன்றைக்கு கூட காங்கிரசின் எம்பி ஆன அதிரஞ்சன் சவுத்ரி பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்தி இருந்தார்.
அந்த வகையில் மிக நிச்சயமாக நாங்கள் இந்த மசோதாவை ஆதரித்து வாக்களிப்போம். இது பெண்களுக்கு கொடுக்கும் சலுகை அல்ல காலங்காலமாக மறுக்கப்பட்டு இருக்கும் உரிமை தான் இப்போது திருப்பித் தரப்படுகிறது. இது தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கடந்த காலக்கட்டத்தில் பாஜக வாக்களித்திருந்தால் இந்த மசோதா அப்போதே நிறைவேறியிருக்கும்" என்று கூறியுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications