டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாநில கட்சிகள் குடும்ப அரசியல் செய்கின்றன.. மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி பாஜக தான் -ஜேபி நட்டா

Google Oneindia Tamil News

டெல்லி: மாநில கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள் என்றும், பாஜக மட்டுமே தனது சித்தாங்களுடன் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளுக்கு எதிராக போராடுகிறது என்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்கர் தலைநகர் ராய்ப்பூரில் பாஜகவின் பூத் அளவிலான கட்சி தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது ஜேபி நட்டா கூறியதாவது:-

பிரபல பாடலாசிரியர் மகள் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி! பிரபல பாடலாசிரியர் மகள் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி!

குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம்

குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம்

''சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் மாநில மக்களை கொள்ளையடிக்கிறார். எங்களின் போராட்டம் குடும்ப அரசியலுக்கானது. ஜம்மு காஷ்மீரில் இருந்து தமிழ்நாடு வரை நாங்கள் குடும்ப அரசியலுக்கு எதிராகத்தான் போராடிக்கொண்டு இருக்கிறோம். ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிக்கு எதிராக எங்களின் போராட்டம் உள்ளது.

பாஜகவை தவிர எந்த ஒரு கட்சியும்

பாஜகவை தவிர எந்த ஒரு கட்சியும்

பஞ்சாபில் ஷிரோமனி அகாலி தளம் கட்சிக்கும் எதிராகவும், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ், ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் மற்றும் தமிழகத்தில் மு.க ஸ்டாலின் என அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சிகளாகும். பாஜக தனது சித்தாந்த பிண்ணனியுடன் வாரிசு அரசியலுக்கு எதிராக போராடுகிறது. பாஜகவை தவிர எந்த ஒரு கட்சியும் சித்தாந்தங்களுடன் இல்லை'' என்றார்.

காங்கிரஸ் கொள்ளையடிக்கிறது

காங்கிரஸ் கொள்ளையடிக்கிறது

காங்கிரஸ் கட்சியை கேலி செய்யும் வகையில் பேசிய ஜேபி நட்டா, தங்களின் சொந்த இல்லத்தை காப்பாற்ற முடியாதவர்கள் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். உங்களுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர்கள் ஏன் கட்சியை விட்டு விலகி செல்கிறார்கள் என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். சத்தீஸ்கரை காங்கிரஸ் கட்சிக்கு ஏடிஎம் ஆக்கியுள்ளது பூபேந்திர பேகல் அரசு மாற்றியுள்ளது. மாநிலத்தை காங்கிரஸ் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறது.

உத்தவ் தாக்கரே கட்சி

உத்தவ் தாக்கரே கட்சி

ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சேவை செய்யும் பணியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மாநில அரசின் பங்கை முறையாக சத்தீஷ்கர் அரசு வழங்குவதில்லை. ஆனால், இன்ஸ்டால்மண்ட்களின் அடிப்படையில் டெல்லிக்கு பணம் அனுப்ப இந்த அரசாங்கம் ஒருபோதும் மறப்பது இல்லை'' என்றார். தொடர்ந்து அண்டை மாநிலமான மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து பேசிய ஜேபி நட்டா, ''மகாராஷ்டிரா மாநிலத்தில் குடும்ப அரசியல் காரணமாகவே உத்தவ் தாக்கரேவின் கட்சி உடைந்தது'' என்றார்.

English summary
BJP National President JP Natta has said that all the state parties are parties doing succession politics and only BJP is fighting against the parties doing family politics with its ideologies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X