சீக்கிரமே மேகதாது அணைக்கு அனுமதி? மத்திய அமைச்சரை சந்தித்த கையோடு கர்நாடக முதல்வர் சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேகதாது அணை திட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்புக்கான கஸ்தூரி ரங்கன் அறிக்கை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியுள்ளார். மேகதாது விவகாரத்தில் நிலுவையில் உள்ள அனுமதிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் இணைந்து ஆலோசனை நடத்தவும் ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் இப்போது டெல்லிக்கு சென்றுள்ளார். சிவக்குமார் கர்நாடக முதல்வராக பதவியேற்ற பிறகு, அவர் மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்.

Karnataka Mekedatu

டெல்லியில் கர்நாடக முதல்வர்

இந்த சூழலில் தான் இப்போது டெல்லி சென்றுள்ள சிவக்குமார், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்தார். அப்போது, மாநிலத்தின் முக்கிய திட்டங்கள் தொடர்பான சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் வனவிலங்கு அனுமதிகள் குறித்து இருவரும் விவாதித்தனர். அதாவது கர்நாடக அரசின் முக்கிய திட்டங்களுக்கு விரைந்து சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்க சிவக்குமார் கோரிக்கை விடுத்தார்.

மேகதாது

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி கே சிவக்குமார், இந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார். கஸ்தூரிரங்கன் அறிக்கை, மேகதாது திட்டத்துடன் தொடர்புடைய வனத்துறை மற்றும் வனவிலங்கு அனுமதிகள், கடலோர பகுதிகளின் சுற்றுச்சூழல் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக அவர் கூறினார்.

கடலோர பகுதிகள், நீர்த்தேக்க திட்டங்கள் மற்றும் மேகதாது தொடர்பாக மத்திய அமைச்சர் சாதகமாகவே பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து சிவகுமார் மேலும் கூறுகையில், "சில அனுமதிகள் தேவைப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய வனத்துறை அமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சரும் இணைந்து கூட்டம் நடத்தவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்" என்றார்.

மேகதாது - பின்னணி என்ன?

காவிரி ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்க திட்டமாக மேகதாது அணையை அமைக்க கர்நாடக அரசு நீண்டகாலமாக முயன்று வருகிறது. பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், நீர்மின் உற்பத்திக்கும் இந்த திட்டம் உதவும் என்பது கர்நாடக அரசின் நிலைப்பாடு. இருப்பினும், இந்த திட்டத்துக்கு தேவையான ஒழுங்குமுறை அனுமதிகள் தொடர்பான சிக்கல்கள் நீடிக்கின்றன. காவிரி நீரை பகிர்ந்துகொள்ளும் கீழ்நிலை மாநிலமான தமிழ்நாடும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதாலேயே தமிழ்நாடு இதை எதிர்க்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை பாதுகாப்பது தொடர்பான கஸ்தூரிரங்கன் அறிக்கையை நிராகரித்து, கர்நாடக சட்டசபை கடந்த செப்டம்பர் மாதம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

மைசூரு தசரா

இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற மைசூரு தசரா கொண்டாட்டங்களின்போது இடையூறுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும், மைசூரு தசரா கொண்டாட்டங்களின்போது இடையூறுகள் எதுவும் இல்லை என மறுத்த சிவகுமார், அவை ஆதாரமற்ற வதந்திகள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+