டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பினராயி விஜயன் செயல்பாடுகளால் ஹேப்பி.. இடது முன்னணியே ஆட்சியை தக்க வைக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: கேரளா சட்டசபைத் தேர்தலில் 82 இடங்களில் வென்று இடது முன்னணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 140 சட்டசபை தொகுதிகளில் 71 தொகுதிகள் வெற்றி என்பது பெரும்பான்மையாக கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் இடதுசாரிகள், யூடிஎஃப், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. கொரோனா காலத்தில் பினராயி விஜயன் எடுத்த நடவடிக்கைகள் உலக அளவில் கவனத்தை ஈர்த்தன.

இது ரொம்ப தப்புங்க... அப்போ கொரோனா பரவலை யாராலும் தடுக்க முடியாது... ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்காஇது ரொம்ப தப்புங்க... அப்போ கொரோனா பரவலை யாராலும் தடுக்க முடியாது... ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா

டைம்ஸ் சி வோட்டர்

டைம்ஸ் சி வோட்டர்

இந்த நிலையில் கேரளா சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்து கணிப்பை நடத்தியது. இதில் இடது கூட்டணிக்கு 82 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளும். யூடிஎஃப் 56 இடங்களில் வெல்லும்.

கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

பாஜகவோ ஒரே ஒரு தொகுதியில் வெல்லும் வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. அதாவது இடது முன்னணி 78 முதல் 86 இடங்களிலும், யூடிஎஃப் 52 முதல் 60 இடங்களிலும் பாஜக ஓரிரு இடங்களில் வெல்லலாம். அதிலும் பாஜக அந்த ஓரிரு தொகுதிகளில் கூட வெல்லாமல் இருக்கலாம் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

2021 ஆம் ஆண்டு

2021 ஆம் ஆண்டு

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இடது முன்னணி 43.5 சதவீதம் வாக்குகளை பெற்ற நிலையில் வரும் தேர்தலில் 0.6 சதவீதம் குறைந்து 42.9 சதவீதம் வாக்குகளை பெறும். அது போல் யூடிஎஃப் கடந்த தேர்தலில் 38.8 சதவீதம் வாக்குகளை பெற்ற நிலையில் இந்த முறை 1.2 சதவீதம் குறைந்து 37.6 சதவீதம் வாக்குகளை பெறும்.

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

கேரளா முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு பினராயி விஜயன் என 38 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்கள். உம்மன் சாண்டி முதல்வராக 28.3 சதவீதம் பேரும், சுகாதாரத் துறை அமைச்சர் கே கே ஷைலஜா 5.9 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இவரது செயல்பாடுகளால் 42.34 சதவீத்ம பேர் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

English summary
Kerala Pre poll survey 2021: Left Democratic Front is likely to win in upcoming election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X