• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எல். முருகனுக்கு ஒரே குஷிதான்.. முகமெல்லாம் பூரிப்பு.. எல்லாத்துக்கும் காரணம் "இது"தான்!

Google Oneindia Tamil News

டெல்லி: எல்.முருகன் முகமெல்லாம் ஒரே சந்தோஷம்.. ஏக பூரிப்பில் இருக்கிறாராம்.. காரணம் தேசிய தலைவர்களே முருகனை பாராட்டி வருவதுதானாம்!

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த வியூகங்களில் தமிழக அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன.. இதில் எல்லாருக்கும் முன்னாடியே களத்தில் குதித்தது பாஜகதான்!

இதில், எல்.முருகன்தான் 60 சீட்டுக்கான அஸ்திவார வலையை அதிமுக பக்கம் வீசியவர்.. இந்த முறை ஓரளவுக்காவது தமிழகத்தில் வாக்குவங்கியை பலப்படுத்த அக்கட்சி பல திட்டங்களை கையில் எடுத்து வருகிறது. குறிப்பாக, முருகன் மாநிலதலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகுதான் பாஜகவின் நடவடிக்கைகள் துரிதமாயின என்று ஒரு பேச்சும் எழுந்துள்ளது.

 உண்மை

உண்மை

இது ஓரளவு உண்மையும்கூட.. கூட்டணியில் ஒரு கட்சி இந்த அளவுக்கு அசுர வேகத்துடன் செயல்படுவது இதுதான் முதல்முறை.. முருகன் பதவி ஏற்றபிறகு, நிறைய மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்... அவர்கள் ரவுடிகளாக இருந்தாலும் சரி, கையில் அரிவாளுடன் கட்சியில் சேரும் அளவுக்கு பாஜகவின் ஈர்ப்புத்தன்மை உள்ளது..

 சரவணகுமார்

சரவணகுமார்

அதேசமயம், ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார் என அதிகாரிகளையும் பாஜகவில் இணைக்க வைக்க முடிகிறது... திடமாக இருந்த குஷ்புவும் பாஜகவில் இணைந்துவிட்டார். அந்த வகையில், திராவிட கட்சிகள் செய்யாததை முருகன் மிக குறுகிய காலத்தில் செய்துள்ளார்.. இதெல்லாம்தான் பாஜக தலைமையை திரும்பி பார்க்க வைத்தது... பிரபலமானவர்கள் இணைவது கட்சிக்கான விஸ்வரூப வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

 குஷ்பு

குஷ்பு

அதேசமயம், கட்சிக்குள் விஐபிக்களை இழுத்து வருவதால் மட்டுமே அந்த கட்சி பலம் பெற்றுவிடுமா, ஏற்கனவே ராதாரவி, எஸ்வி சேகர் போன்றோர் இருந்தும், ஏன் பாஜக தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற முடியவில்லையோ போன்ற கேள்விகள் நமக்கு வேண்டுமானால் எழ செய்தாலும், பாஜக தலைமையிடம், அப்படி பார்க்கவில்லை... மிக குறுகிய காலத்தில் முருகனின் செயல்பாடுகளை பாராட்டவே செய்து வருகிறது.

 வேல் யாத்திரை

வேல் யாத்திரை

இப்படிப்பட்ட சூழலில்தான் வேல் யாத்திரை துவங்கப்பட்டுள்ளது.. கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையிலும், தமிழக அரசு வேண்டாம் என்று சொல்லியும், யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.. அந்தவகையில், இதுவரை ஒவ்வொரு ஊரிலும் நடந்த யாத்திரைகள் பற்றின மூன்று நிமிட வீடியோவை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார் முருகன்.. பிரதமருக்கு நெருக்கமாக உள்ள ஒரு அதிகாரி, இந்த வீடியோவை பிரதமருக்கு காண்பித்து வருகிறாராம்.

 தலைமை

தலைமை

முருகனின் இந்த வேல் யாத்திரை குறித்து, தமிழக பாஜக தலைவர்களிடையே கருத்து வேறுபாடு காணப்பட்டாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், முருகன் செயல்பட்டு வருகிறார்... கட்சி தலைமைக்கும், பிரதமருக்கும், தன் யாத்திரை குறித்த தகவல்களை உடனுக்குடன் தந்து வருகிறார்.. தமிழக அரசியல் நிலை குறித்தும் அடிக்கடி தெரிவித்தபடியே உள்ளாராம்.. இதுதான் தேசிய தலைவர்களை ஈர்த்து வருகிறது.. அதனால், தேசிய தலைவர் நட்டாவை, தமிழகத்திலிருந்து யார் சந்தித்து பேசினாலும், அவர்களிடம் முருகனை அவர் பாராட்டி தள்ளுகிறாராம்.

 சமூக வளர்ச்சி

சமூக வளர்ச்சி

இருந்தாலும், தன் கட்சி வளர்ந்தால் போதும் என்ற மனப்பான்மையிலேயே ஈடுபட்டு வருவது எந்த வகையிலும் பலன் தராது. தமிழகத்தின் வேலை வாய்ப்புகள், சமூக வளர்ச்சி, கல்வி மேம்பாடு, பிற்பட்டோர் நலன், மருத்துவ மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி என்ற ஒரு சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை முன்னிறுத்தி இதுவரை பாஜக எதையுமே செய்தது கிடையாது.. அதற்கான முக்கியத்துவத்தை தந்து போராடியதும் கிடையாது... பாஜக தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒரு கட்சி என்பது தான் தமிழர்களுடைய நிலைப்பாடாக உள்ள நிலையில், அதற்கான காரியத்தில்தான் அக்கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் நாம் தெரிவிக்க வேண்டி உள்ளது.

English summary
L Murugan is elated over his Vel yathra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X