டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'லால் சிங் தத்தா' படத்தை புறக்கணிப்போம்.. போராடிய வலதுசாரிகள்! வருந்துகிறேன்.. கலங்கிய அமீர் கான்

Google Oneindia Tamil News

டெல்லி; "நான் எந்த வகையிலாவது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என பாலிவுட் நடிகரும் 'லால் சிங் தத்தா' திரைப்படத்தின் தயாரிப்பாளருமான 'அமீர் கான்' கூறியுள்ளார்.

'லால் சிங் தத்தா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், திடீரென சமூக வலைத்தளங்களில் '#bycott lal singh chaddha' ஹாஷ்டேக் டிரன்டாகி உள்ளது. இதனையடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

திரைப்படத் துறை மட்டுமல்லாது தொடர்ந்து சமூக தளங்களிலும் அமீர் கான் முற்போக்காக இயங்கி வருகிறார். அவருடைய கருத்து தொடர்ந்து விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிச்சிட்டோம்.. 'துரோகி, எதிரி’ - 2 பேரை விளாசிய எடப்பாடி பழனிசாமி! அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிச்சிட்டோம்.. 'துரோகி, எதிரி’ - 2 பேரை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

திரைப்படம்

திரைப்படம்

ஹலிவுட்டில் வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' எனும் திரைப்படம் 'லால் சிங் தத்தா' என இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 1984ல் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் எனும் நாவலின் அடிப்படையில் ஹாலிவுட் நட்சத்திரமான டொம் ஹாங்கின் நடிப்பில் வெண்டி பைனர்மன், ஸ்டீவ் டிஷ், ஸ்டீவ் ஸ்டார்கி ஆகியோரின் தயாரிப்பில் ராபெர்ட் செமெக்கிஸ் இயக்கத்தில் 1994ல் இந்த திரைப்படம் வெளியானது. வெளிவந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆன நிலையிலும் இப்படம் குறித்து சிலாகித்து பேசுவோர் பலர் உண்டு. 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படம் 6 ஆஸ்கர்களை அள்ளி சென்றது.

ரீமேக்

ரீமேக்

இந்நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய நடிகர் அமீர்கான் முன்வந்தார். அவருடைய சொந்த தயாரிப்பில் 'லால் சிங் சத்தா' எனும் பெயரில் படம் தயாரிக்கப்பட்டது. இதில் அமீர்கானும்-கரீனா கபூரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னரே சுமார் ரூ.8 அளவில் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் பெற்றுள்ளது.

 டிரரென்டிங்

டிரரென்டிங்

இந்நிலையில் திடீரென சமூக வலைத்தளங்களில் '#bycott lal singh chaddha' ஹாஷ்டேக் டிரென்டானது. சமீப காலங்களாக அமீர் கான் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றியை ஈட்டவில்லை என்கிற நிலையில், 'லால் சிங் தத்தா' அவருக்கு முக்கியமான படமாக உள்ளது. இதனையடுத்து இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நான் எந்த வகையிலாவது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக்கூறியுள்ளார்.

Recommended Video

    AamirKhan |இந்த படத்தின் ஸ்கிரிப்ட் என்ன ஸ்பெஷல் | Amir Khan, Udhaynidhi Stalin, Naga Chaitanya
    வருத்தம்

    வருத்தம்

    மேலும், "நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. இந்த படத்தை ('லால் சிங் தத்தா') பார்க்க யாருக்கேனும் விருப்பம் இல்லையெனில், அவர்களின் உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன்" என்று கூறியுள்ளார். இந்த திரைப்படம் பான் இந்தியா அளவில் வெளியாகிறது. இந்தியில் வெளியாகும் ஒரு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவது இதுதான் முதன்முறை. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்த உதயநிதி ஸ்டாலின், "எந்த மொழியையும் நாம் எதிர்க்கவில்லை. மொழி திணிப்பைத்தான் நாம் எதிர்க்கிறோம். இதற்கு முன்னர் தெலுங்கு படத்தை வெளியிட்டிருக்கிறோம். அதேபோலதான் இதுவும்" எனக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bollywood actor and producer of 'Lal Singh Chadha' movie 'Aamir Khan' said, If I have hurt anyone by any means, I regret it. I don't want to hurt anyone. If someone doesn't want to watch the film, I'd respect their sentiment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X