விக்கி- நயன்தாரா விடுங்க! கேன்சரால் பாதிக்கப்பட்ட தோழியின் ஆசையை.. நிறைவேற்ற வாடகை தாயாக மாறிய பெண்
டெல்லி: விக்கி- நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பே ஓயாத நிலையில், பெண் ஒருவர் தோழிக்காக வாடகைத் தாயாக மாறிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
விக்கி- நயன்தாரா குழந்தை அறிவிப்பிற்குப் பின்னர், எங்குத் திரும்பினாலும் வாடகைத் தாய் விவகாரம் தான் பேசுபொருளாகவே உள்ளது. வாடகைத் தாய் முறை குறித்து பலரும் தேடி வருகின்றனர்.
வாடகைத் தாய் விவகாரத்தில் விக்கி- நயன்தாராவிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த விவகாரம் கடந்த சில காலமாகவே விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

வாடகைத் தாய்
நமது நாட்டில் வாடகைத் தாய் முறைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், உலகின் பிற நாடுகளில் இந்தளவுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. குழந்தை பெற்ற கொள்ள முடியாத பலரும் இந்த முறையைப் பின்பற்றி குழந்தைகளைப் பெற்று வருகின்றனர். இப்படித்தான் கடந்த 2019இல் அமெரிக்காவில் 61 வயதான மூதாட்டி ஒருவர் தனது சொந்த பேத்திக்கு வாடகைத் தாயாக மாறி குழந்தை பெற்றெடுத்துத் தந்தார்.

நெகிழ்ச்சி
அதேபோல கடந்த 2021ஆம் ஆண்டில் இளம் பெண் ஒருவர் தனது தன்பால் ஈர்ப்பு சகோதரருக்கு வாடகைத் தாயாக இருந்தார். அந்த இருவரும் வாடகைத் தாய் தேடிப் பல இடங்களுக்கு அலைந்தனர். இருப்பினும், எங்கும் அவர்களுக்கு வாடகைத் தாய் கிடைக்கவில்லை. இதையடுத்து கடைசியாகத் தனது சகோதரியிடமே கேட்டு, அவரையே வாடகைத் தாயாக இருக்க வைத்து உள்ளனர்.

கேன்சர்
இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை புற்று நோயால் குழந்தையைச் சுமக்க முடியாத தோழிக்குப் பெண் ஒருவர் வாடகைத் தாயாக மாறி குழந்தையைப் பெற்றெடுத்துத் தந்துள்ளார். அமெரிக்காவின் கேசி புஷ் என்ற பெண் கடந்த 2016இல் துணையுடன் உடலுறவு கொள்ளும் போது திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது. அப்போது சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது

கரு முட்டை
முழு சோதனையில் அந்தப் பெண்ணுக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதில் 2B வகை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது அது அவரது கருப்பைக்கு வெளியே பரவத் தொடங்கியது. கேன்சருக்கான ரேடியோதரபி காரணமாக மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும். இதனால் அந்த பெண்ணால் குழந்தையைச் சுமக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டில் அந்த பெண் தனது முட்டைகளை உறைய வைத்து உள்ளார்.

நெருங்கிய தோழி
என்றாவது தனது குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர் கரு முட்டையை உரைய வைத்து உள்ளார். கேன்சரை எதிர்த்துப் போராடிய அந்த பெண், கடந்த மார்ச் 2018இல் வெற்றிகரமாக கேன்சரை வென்று எடுத்தார். இருப்பினும், அவரால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது அவரது நெருங்கிய தோழி பெக்கி சிடெல் அவருக்கு உதவியுள்ளார்.

பாராட்டு
32 வயதான பெக்கி சிடெல் தனது தோழிக்காக வாடகைத் தாயாக மாறியுள்ளார். பெக்கி சிடெலுவுக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில், தனது தோழியின் ஆசையை நிறைவேற்றக் குழந்தையைச் சுமக்கச் சம்மதித்து உள்ளார். அதன்படி கடந்த ஆண்டு இறுதியில் அவர் கர்ப்பமானார். இந்த ஆண்டு அவர்களுக்கு அழகிய குழந்தையும் பிறந்து உள்ளது. தோழியின் ஆசைக்காக வாடகைத் தாயாக மாறிய இந்தப் பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications