மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு.. 12 அமைச்சர்கள் ராஜினாமா! புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்பு
டெல்லி: மத்திய அமைச்சரவையில் இருந்து 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவை பொறுப்பேற்றவுடன் 2 ஆண்டுகள் கழித்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பதவியேற்பு இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இதுவரை 12 அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர், சந்தோஷ்குமார் கங்வார், பாபுல் சுப்ரியோ, தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ, ரத்தன்லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி, திபஶ்ரீ செளத்ரி
ஆகிய 12 பேர் நீக்கப்பட்டனர்.

43 அமைச்சர்களின் பட்டியல் வெளியானது. இவர்கள் ஜனாதிபதி மாளிகை பதவியேற்றுக் கொண்டனர். இந்த விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
43 அமைச்சர்களில் 4 பெண்கள் இடம்பெற்றனர். காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு சென்ற ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய அமைச்சராகியுள்ளார். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண ராணே, அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து 7 பேரும் குஜராத்திலிருந்து 5 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சரவையில் மொத்தம் 15 கேபினட் அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றனர். மற்ற 7 பேர் புதியவர்களாவர்.
கர்நாடகாவிலிருந்து நாராயணசாமி, சோபா கராண்டலஜே, பகவத் ராவ் கூபா, ராஜீவ் சந்திரசேகர் ஆகிய 4 பேர் அமைச்சராகினர். பீகாரிலிருந்து ராம்சந்திர பிரசாத் சிங், பசுபதி குமார் பராஸ், ராஜ் குமார் சிங் ஆகிய 3 பேரும் குஜராத்திலிருந்து மன்சுக் மன்தாவியா , புருஷோத்தம் ரூபாலா, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், முஞ்சபரா மகேந்திர பாய், சவுகான் தேவ்சிங் ஆகிய 5 பேரும் அமைச்சர்களாகியுள்ளனர்.
அது போல் மத்திய பிரதேசத்திலிருந்து புதிய முகங்களான ஜோதிராதித்ய சிந்தியா, பாரதி பிரவீன் பவார், வீரேந்திர குமார் ஆகிய 3 பேரும் அமைச்சர்களாகியுள்ளனர். இணையசமைச்சராக இருந்த அனுராக் தாக்கூர் அமைச்சரானார்.
43 அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு:
நாராயணன் ரானே
சர்பானந்த சோனோவால்
வீரேந்திர குமார்
ஜோதிராதித்ய சிந்தியா
ராம்சந்திர பிரசாத் சிங்
அஸ்வின் வைஷ்ணவ்
பாஸுபதி குமார் பராஸ்
கிரண் ரிஜிஜு
ராஜ்குமார் சிங்
ஹர்தீப் சிங் புரி
மன்சுக் மன்தாவியா
பூபேந்தர் யாதவந்
புருஷோத்தம் ரூபாலா
கிஷன் ரெட்டி
அனுராக் சிங் தாக்கூர்
பங்ஜக் சவுத்ரி
அனுப்ரியா சிங் படேல்
சத்ய பால் சிங் பாகல்
ராஜீவ் சந்திரசேகர்
சோபா கராண்டஜே
பானு பிரதாப் வர்மா
தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
மீனாட்சி லேகி
அனுபமா தேவி
நாராயணசாமி
கவுஷல் கிஷோர்
அஜய் பட்
பி எல் வர்மா
அஜய் குமார்
சவுகான் தேவ்சிங்
பகவந்த் கூபா
கபில் மோரேஷ்வர் பாட்டீல்
சுஷ்ரி பிரதிமா பவுமிக்
சுபாஷ் சர்கார்
பகவத் கிஷன் ராவ் காரத்
ராஜ்குமார் ரஞ்சன் சிங்
பாரதி பிரவீன் பவார்
பிஷ்வேஸ்வரர் துடு
சாந்தனு தாகூர்
முஞ்சபரா மகேந்திர பாய்
ஜான் பார்லா
எல் முருகன்
நிஸித் பிரமானிக்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications