ஆய்வுக்குழு அறிக்கைக்கு பின் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டம்.. டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவு
Recommended Video
டெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இத்தோல்விக்கான காரணம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு அளிக்கும் அறிக்கையில் அடிப்படையில், அதிரடி மாற்றங்கள் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான ஷீலா தீட்சித், டெல்லி மாநில பாஜக தலைவரான மனோஜ் திவாரியிடம் சுமார் 3.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்படி இருந்த நிலையில் இது போன்றதொரு பெரிய தோல்வியை தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை.

7 தொகுதிகளில் ஒன்றில் கூட வெல்ல முடியாததால், கடும் அதிர்ச்சி அடைந்தது கட்சி தலைமை. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய மாநில தலைவர் ஷீலா தீட்சித், கடந்த சில நாட்களுக்கு முன் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
அவர் அமைத்த இந்த தோல்வி ஆராயும் குழுவானது, கட்சி தொண்டர்களிடையே கருத்துகளை கேட்டு பதிவு செய்து வருகிறது. கட்சியின் சார்பாக ஆய்வில் ஈடுபட்டுள்ள குழு உறுப்பினர்களுள் ஒருவரான யோகானந்த் சாஸ்திரி கூறுகையில், தலைநகர் டெல்லியில் ஒரு மக்களவை தொகுதியை கூட கைப்பற்ற முடியாதது வேதனை அளிப்பதாக கூறினார்.
இந்த படுதோல்வி குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும், 7 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் 2 வேட்பாளர்களிடமிருந்து கருத்துகளை கேட்டுள்ளதாகவும் கூறினார். கட்சியை மேம்படுத்தி வர உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த, முக்கியமான ஆலோசனைகள் தொண்டர்களிடமிருந்து பெறப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்த முடிவுகளுடன், தொண்டர்களின் ஆலோசனைகளையும் பட்டியலாக தயாரித்து ஷீலா தீட்சித்திடம் அளிக்க உள்ளதாக குறிப்பிட்டார் .
இது குறித்து பேசிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ஆய்வுக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், கட்சியில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறினார். இதில் மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்கள் உள்ளிட்ட பலர் மீது, நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறினார்
ஆனால் தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவில் உள்ளவர்களில் சிலரது செயல்பாடுகள், தேர்தலின் போது கேள்விக்குறியதாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களை ஆய்வு கமிட்டியில் சேர்த்து தோல்விக்கான காரணத்தை ஆராய சொல்வதில், பலருக்கு உடன்பாடில்லை என கூறப்படுகிறது.
-
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications