டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாத்மா காந்தியின் ஆன்மா கவலைப்பட்டிருக்கும்.. சோனியா காந்தியின் டைமிங் தாக்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளை பார்த்து மகாத்மா காந்தியின் ஆன்மா கவலை அடைந்து இருக்கும், நொந்து போயிருக்கும் என்று காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, ராஜ்காட் பகுதியில், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் சோனியா காந்தி சிறிய உரையாற்றினார்.

Mahatma Gandhi’s soul would be pained: Sonia Gandhi

அப்போது அவர் கூறுகையில், இந்தியா மற்றும் காந்தி ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதது. ஆனால் சிலர், இந்தியா என்றால் ஆர்எஸ்எஸ் என்று மாற்றுவதற்கு நினைக்கிறார்கள். தாங்கள் தான் ரொம்பவே உயர்வானவர்கள் என்று நினைத்துக் கொள்வோர், மகாத்மா காந்தியின் தியாகங்களை நினைத்து பார்க்கவேண்டும்.

தவறுகளால் அரசியல் நடத்தி வருவோருக்கு, மகாத்மா காந்தியின் அகிம்சை என்ற கொள்கை புரிய போவது கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். காங்கிரஸ் மட்டுமே மகாத்மா காந்தியின் பாதையை பின்பற்றி கொண்டிருக்கிறது.

இம்ரான்கான்தான் காரணம்.. சவுதி விரைந்த அஜித் தோவல்.. முகமது பின் சல்மானுடன் 2 மணிநேரம் தீவிர ஆலோசனைஇம்ரான்கான்தான் காரணம்.. சவுதி விரைந்த அஜித் தோவல்.. முகமது பின் சல்மானுடன் 2 மணிநேரம் தீவிர ஆலோசனை

வஞ்சிக்கப்பட்டவர்களுக்கும், விவசாயிகளுக்கும், கல்வி, வேலை வாய்ப்பு அளித்தது காங்கிரஸ் மட்டுமே. கடந்த சில வருடங்களாக நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை பார்த்து மகாத்மா காந்தியின் ஆன்மா கண்டிப்பாக கவலைப்பட்டிருக்கும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளில், எனது மரியாதையை செலுத்துகிறேன். தனது சொல், செயல் மூலமாக அனைத்து உயிர்களுக்கும், அன்பையும், அகிம்சையையும் கற்றுக்கொடுத்தவர் மகாத்மா காந்தி. வெறுப்பு, வன்மம் போன்றவற்றை, அவரது கொள்கைகளால்தான் ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Congress interim president Sonia Gandhi said Mahatma Gandhi’s soul would be pained by what has been happening in India in the last few years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X