இரவில் மகளுடன் வீட்டில் இருந்த ஆண் நண்பர்.. திடீரென அங்கு வந்த தந்தை.. பார்த்து ஷாக்காகி பயங்கரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : தனது 17 வயது மகளுடன் வீட்டிற்குள் இருந்த அவரது 20 வயது காதலனை பார்த்த தந்தை, ஆத்திரத்தில் அவரை கட்டி வைத்து அடித்தே கொலை செய்தார். இந்த சம்பவம் வடகிழக்கு டெல்லியின் கரவால் நகரில் நடந்துள்ளது.

தனது மகளுடனான உறவை முறித்துக்கொள்ளுமாறு பல முறை கண்டித்தும் கேட்காத அந்த 20வயது இளைஞன், யாரும் இல்லாத சமயத்தில் வந்ததால் கோபம் அடைந்த தந்தை அடித்துக்கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லியின் வடகிழக்கில் உள்ள கராவல் நகர் பகுதியில் 46 வயது நபர், தனது 17 வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த மைனர் பெண், உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத்தை சேர்ந்த 20 வயது இளைஞரை காதலித்து வந்திருக்கிறார்.

டெல்லி வந்த இளைஞன்

டெல்லி வந்த இளைஞன்

மகளின் காதல் குறித்து அறிந்த அவரது தந்தை உறவை கைவிடுமாறு இருவரையும் பலமுறை எச்சரித்திருக்கிறார். ஆனால் இருவரும் தங்கள் காதலை கைவிடவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை தனது மாமாவை பார்ப்பதற்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வந்திருக்கிறார் அந்த 20 வயது இளைஞர்.

திடீரென வந்த தந்தை

திடீரென வந்த தந்தை

அன்று இரவு தனது காதலியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து இளைஞர் வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த காதலியின் தந்தை வீட்டில் மகளுடன் இளைஞர் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்து பலமாக தாக்கி உள்ளார்.

உயிரிழந்த இளைஞர்

உயிரிழந்த இளைஞர்

கட்டிவைத்து தாக்கியதுடன், கத்திரிக்கோலால் குத்தி கிழித்திருக்கிறார்..தொடர்ந்து சரமாரியாக அடித்து காயப்படுத்தியதால் இளைஞர் பரிதாபமாக இறந்து போனார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் தந்தை, தன்னுடைய நண்பரை தொலைபேசியில் அழைத்து விவரத்தை கூறி உதவிக்காக அழைத்துள்ளார். பின்னர் இருவரும் அருகே இருக்கும் ஜிம் பகுதியில் அந்த இளைஞரின் சடலத்தை கொண்டு சென்று போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்

நண்பருக்கு வலை

நண்பருக்கு வலை

உடலை கண்டுபிடித்த போலீசார், தீவிர விசாரணையில் உண்மை வெளியே வந்தது. மகளை சந்திக்க வந்த இளைஞரை அவரின் தந்தை கட்டி வைத்து அடித்து கொலை செய்ததும், நண்பரின் உதவியுடன் சடலத்தை மறைத்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அப்பெண்ணின் தந்தையை கைது செய்த போலீசார் சடலத்தை மறைக்க உதவிய அவருடைய நண்பர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+