டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இ-சிகரெட் தடை விதிப்பு சரியான முடிவு.. வானொலி உரையில் மோடி விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    E-cigarettes Vapes e-Hookah banned

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி நாவராத்திரி உள்ளிட்ட பிற பண்டிகைகளையொட்டி வாழ்த்து தெரிவித்ததோடு, 150 வது காந்தி ஜெயந்தியை சிறப்பானதாக்கி, நாட்டை ஒருமுறை பயன்படுத்தும், பிளாஸ்டிக்கிலிருந்து விடுதலையடைய வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.

    மோடி பேசியதாவது: புகையிலை மூளையின் வளர்ச்சியை பாதிக்கிறது, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், எனவே அதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். இ-சிகரெட்டில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதால் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வு இல்லை. இ-சிகரெட்டுகளிலிருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும்.

    Mann Ki Baat: Banned e-cigarettes for better future of India, says PM Modi

    இ-சிகரெட்டுகளால், எந்த ஆபத்தும் இல்லை என்று குறித்த தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இ-சிகரெட்டுகளில் நிகோடின் கொண்ட திரவங்களை சூடாக்குவது, சாதாரண சிகரெட்டுகளைப் போலன்றி, ஒரு வகையான ரசாயன புகைகளை உருவாக்குகிறது, இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    காஷ்மீர் பிரச்சனையை ஐ.நாவுக்கு நேரு கொண்டு சென்றது இமாலய தவறு: அமித்ஷாகாஷ்மீர் பிரச்சனையை ஐ.நாவுக்கு நேரு கொண்டு சென்றது இமாலய தவறு: அமித்ஷா

    அக்டோபர் 2 ம் தேதி தொடங்கப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரச்சாரத்தில் அனைத்து மக்களும், கைகோர்க்க வேண்டும். காந்தியின் 150 வது பிறந்தநாளில், தூய்மைக்கான தீர்மானத்தை எடுத்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் இல்லா நாட்டை உருவாக்கனும்.

    நவராத்திரி விழா, கர்பா, துர்காபூஜை, தசரா, தீபாவளி போன்ற எண்ணற்ற பண்டிகைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். அனைவருக்கும் பண்டிகைகளுக்கு, வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பண்டிகைகளில் உள்ள வீடுகள் மகிழ்ச்சியாக இருக்கும்.ஆனால் இந்த விழாக்களின்போது, மகிழ்ச்சியை இழந்தவர்கள் நம்மைச் சுற்றி பலர் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். சில வீடுகளில், குழந்தைகள் இனிப்புக்காக ஏங்குகிறார்கள். இந்த முறை, பண்டிகைகளின்போது, உங்களின் ஒளி விளக்கு, இந்த இருளை அகற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    English summary
    Prime Minister Narendra Modi on Sunday shared his thoughts with the people across the country and abroad in his 'Mann Ki Baat' programme on All India Radio at 11 AM. This was the 57th episode of the monthly radio programme.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X