இந்திய சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்தியவர்.. போராட்ட களத்திலேயே இன்னுயிரை மாய்த்த மாதங்கினி ஹஸ்ரா!
டெல்லி: இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவரும், இறுதியில் போராட்ட களத்திலேயே தனது இன்னுயிரை மாய்த்த மாதங்கினியின் வீர வரலாற்றை இதில் பார்க்கலாம்.
இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் இந்த பொன்னான தருணத்தில் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டு அதிகம் கொண்டாடப்படாத சுதந்திர போராட்ட தலைவர்கள் பற்றி நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், இன்று நாம் பார்க்க இருப்பது தலைவர் மாதங்கினி ஹஸ்ரா.

சுதந்திர போராட்டத்தில்
காந்திபுரி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட மாதங்கினி ஹஸ்ரா 1869 ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் ஹோக்லா கிராமத்தில் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தார். வறுமையில் அவரது குடும்பம் வாடியது. இதனால், மாதங்கினி ஹஸ்ராவால் முறையான கல்வியை பெற முடியவில்லை. 12-வயதில் அவருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டது. 18-வயதில் கணவர் இறந்து விட்டதால், இல்லற வாழ்க்கையை தொடங்கும் முன்பே விதவையானார். 1905 ஆம் ஆண்டு முதல் காந்தியவாதியாக சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தார்.

உப்பு சத்தியாகிரக போராட்டத்தில்
1932 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தார். உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டார். எனினும் உடனடியாக ஆங்கிலேயர்கள் அவரை விடுவித்தனர். எனினும் மீண்டும் ஆங்கிலேயர்கள் மாதாங்கினி ஹஸ்ராவை கைது செய்தனர். பஹரம்பூர் சிறையில் 6 மாதங்கள் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிரமாக செயலாற்றினார். தானே நெய்த கதர் ஆடைகளையே உடுத்துவதை வழக்கமாக்கி கொண்டார். 1933 ஆம் ஆண்டு செராம்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டின் போது போலீஸ் நடத்திய தடியடியில் காயமடைந்து நாட்டின் சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்தினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு
இப்படி மாதங்கினி ஹஸ்ரா வாழ்க்கையின் பெரும் பகுதி போராட்டக்களத்திலேயே கழிந்தது. ஆங்கிலேய அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி, சிறை தண்டனை, தாக்குதல் என பல இன்னல்களை, காயங்களை, துயரங்களை தாங்கினார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தீவிரம் அடைந்த 1942 ஆம் ஆண்டு காந்தியடிகளை ஆங்கிலேய அரசு கைது செய்தது. அவரது கைதுக்கு எதிராக நாடு முழுவதும் ஊர்வலங்கள், போராட்டங்கள் நடைபெற்றது. 71 வயதான மதாங்கினி ஹஸ்ரா இந்த போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுத்தார்.

காந்தியை விடுதலை செய்யக்கோரி
1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி மாதங்கினி ஹஸ்ரா டாம்லுக் காவல் நிலையத்தின் வாயிலில், ஆயிரக்கணக்கானோருடன் திரண்டு வந்த மாதங்கினி ஹஸ்ரா, காந்தியடிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். ஆங்கிலேய போலீசார் மாதங்கினி ஹஸ்ராவையும் போராட்டகாரர்களையும் கடுமையாக எச்சரித்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதில் மாதங்கினி ஹஸ்ரா குண்டு பாய்ந்து உயிரிழந்தார். போராட்ட களத்திலேயே தனது இன்னுயிரை இழந்த மாதங்கினி ஹஸ்ராவின் தியாககும் போற்றப்பட வேண்டியதே.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications