டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மே மாதம் ரொம்ப முக்கியம்.. ஹாட்ஸ்பாட்டுகளில் தீவிரம் காட்டுவது அவசியம்.. கொரோனாவை வெல்ல!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மே 3 வரை இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது நெருங்கும் நிலையில் மே மாதம் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் போராட்டம் வெற்றியும் அடையலாம் அல்லது தோல்வியிலும் முடிவடையலாம். எனவே ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகள் வகுப்பது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது வரும் மே 3 ஆம் தேதி முடிவடைகிறது. எனினும் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை.

இதனிடையே கடந்த திங்கள்கிழமை மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றார். இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் மே 3 க்கு பிறகும் நீட்டிக்கப்படும் என்றும் எனினும் பல மாவட்டங்களில் மக்களுக்கும் குறிப்பிட்ட சேவைகளுக்கும் சில தளர்வுகள் விதிக்கப்படும் என நேற்று மத்திய அரசு தெரிவித்தது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

இந்த நிலையில் இந்தியாவில் கோவிட் 19 அதிகம் பாதித்த ஹாட்ஸ்பாட் மாவட்டங்களின் எண்ணிக்கையில் 170- லிருந்து 129 ஆக கடந்த 15 நாட்களில் குறைந்துவிட்டது. அதே வேளையில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்கள் அல்லது பச்சை மண்டலங்கள் 325-லிருந்து 307 குறைந்துவிட்டது என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

உத்தரவு

உத்தரவு

இந்த காலகட்டத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கையும் 207-லிருந்து 297 ஆக அதிகரித்தது. இதுகுறித்து நொய்டாவை சேர்ந்த நுரையீரல் தொற்று மருத்துவர் டாக்டர் ராஜேஷ் குப்தா கூறுகையில் லாக்டவுனால் கொரோனா வைரஸை கொல்ல முடியாது. அந்த வைரஸ் தொற்றின் வேகத்தை குறைக்கும் அவ்வளவே என்பதை முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த இரு வாரங்கள் அல்லது மேலும் சில நாட்களுக்கு சிகப்பு மண்டலங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும்.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

பச்சை மண்டலங்களில் வேண்டுமானால் ஊரடங்கை தளர்த்திக் கொள்ளலாம். ஆனால் பச்சை மண்டலங்களில் உள்ளோரும் சிகப்பு மண்டலங்களில் உள்ளோரும் எந்த வகையிலும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். வரும் மே மாதம் கொரோனா வைரஸை எதிர்த்து இந்திய அரசின் போராட்டம் வெற்றியும் பெறலாம், தோல்வியும் அடையலாம். எனவே கொரோனா அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் இருப்பது மிகவும் முக்கியமானது என்றார்.

சோப்பு போட்டு கழுவுவது

சோப்பு போட்டு கழுவுவது

இதுகுறித்து நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் அரவிந்த் குமார் கூறுகையில் ரயில் சேவைகள், விமான சேவைகள், மாநிலங்களுக்கிடையே பேருந்து சேவைகள், மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், மத ரீதியிலான இடங்கள் ஆகியவை தொடர்ந்து மூடப்படுவது முக்கியம். பச்சை மாவட்டங்களின் எல்லைகள் சீலிடப்பட வேண்டும். அங்கு சமூக விலகல் அவசியம் கடைப்பிடிப்பது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது, மாஸ்க்குளை போடுவது ஆகியன தங்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாக மக்கள் கருத வேண்டும். அது போல் கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் லாக்டவுன் தொடர வேண்டும்.

Recommended Video

    உலகத்தை உலுக்கிய கொள்ளை நோய்கள்... இனியாவது மாறுவோமா?
    கொரோனா அதிகம்

    கொரோனா அதிகம்

    மே மாதம் முக்கியமானது. இந்தியா இதுவரை கோவிட் 19-க்கு எதிராக நடத்திய போராட்டம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இதை பயனுள்ளதாக்க சிகப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என்றார். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 15 மாவட்டங்களில் கொரோனா அதிகம் பாதித்துள்ளதாக அரசு அடையாளம் கண்டுள்ளது.

    English summary
    May Month will be going to be an important to fight against Coronavirus, says Medical experts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X