டீல் ஓகே.. காங்கிரஸில் இணைகிறார் பிகே? இருந்தாலும் ஒரு சின்ன சிக்கல்! முக்கிய தலைகள் வைத்த ட்விஸ்ட்!
டெல்லி : தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், பிரசாந்த் கிஷோரின் முன்மொழிவை மதிப்பீடு செய்ய சோனியா காந்தி அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, அவர் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் விலகி, காங்கிரசில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் இரு ஆண்டுகள் உள்ள போதிலும் கட்சிகள் அதனை நோக்கியே தங்கள் திட்டத்தை வகுத்து வருகின்றன.

பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
மூன்றாவது முறையாக ஹாட்ரிக் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தோடு பாஜகவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் வரிந்து கட்டி தயாராகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகளின் பங்கு முக்கியம் என்பதால் அது குறித்த வியூகங்களை வகுப்பது பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோர் சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

சோனியா காந்தி
சோனியாவுடன் அவர் 3 நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பல்வேறுபிரச்சினைகள் விவரித்ததோடு, 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சுட்டிக் காட்டினார். மேலும் தனக்கு உரிய பதவி தந்து, அதிகாரம் தந்தால் அதிரடியாக பல புதிய வியூகங்களை கொண்டுவரத் தயார் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

ஆய்வு குழு அமைப்பு
இதுகுறித்து ஆராய அசோக் கெலாட் மற்றும் பூபேஷ் பாகேல், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் மூத்த தலைவர்களான முகுல் வாஸ்னிக், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் சுமார் 9 திட்டங்களையும் பிரசாந்த் கிசோர் முன் வைத்த நிலையில், இந்த திட்டங்கள் உண்மையில் காங்கிரஸிற்கு பயனுள்ளதா, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கலாமா என்பது குறித்து சோனியா காந்தி அமைத்த குழு ஒரு வாரத்திற்குள் அளிக்கும் அறிக்கையை வைத்து சோனியா காந்தி முடிவெடுப்பார்.

கிட்டத்தட்ட உறுதி
இந்நிலையில் தான் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் இணைவது கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், பிரசாந்த் கிஷோரின் முன்மொழிவை மதிப்பீடு செய்ய சோனியா காந்தி அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, அவர் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் விலகி, காங்கிரசில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் கிஷோரின் பரிந்துரைகளை செயல்படுத்தப்படலாம் என்று கருதுகின்றனர். இந்நிலையில் சோனியா காந்தி ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் ஆய்வு குழுவுடன் ஆலோசனைகளை முடித்து, கிஷோருடன் இறுதி சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications