ஜிங்குசா.. ஜிங்குசா.. மோடி புடவை ஜிங்குசா..முந்தானையில் மோடி உருவம் .. கலக்கும் சூரத் சேலை!
பிரதமரின் உருவம் பதித்த சேலை குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

காந்திநகர்: வந்துவிட்டது எலக்ஷன் களை... பிரதமர் மோடியின் உருவம் பதித்த சேலைகள் இப்போது விற்பனையில் சக்கை போடு போடுகிறதாம்.
பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உருவம் பதித்த ஆடைகளை அணிந்து கொள்வார்கள்.
சில நேரங்களில் விருப்பமான தலைவர்கள் அதாவது சேகுவேரா, நெல்சன்மண்டேலா போன்ற உலக தலைவர்களின் உருவம் பதித்த ஆடைகளையும் அணிவார்கள். ஏனென்றால், இவர்கள் மீதான கிரேஸ் இன்னும் குறையாமல் இருப்பதுதான்.

பாலும் பழமும்
சில சமயங்களில் அந்த நேரத்துக்கு யார் பிரபலமோ, என்ன பிரபலமோ அதை வைத்தும் ஆடைகள் தயாராகும். குறிப்பாக அன்று பாலும் பழமும் சினிமா வந்தபோது, பாலும் பழமும் புடவை என்றே ஒரு சேலை பிரபலமானது... கடைசியில் நதியா, ஜோதிகா, அஜித், விஜய் என்று பட்டியல் நீண்டு வருகிறது.

பிரியங்கா டி-ஷர்ட்
இப்போது எலக்ஷன் சீசன் தொடங்கிவிட்டதால் அரசியல் பிரபலங்களின் உருவம் பதித்த ஆடைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு பிரியங்காகாந்தி உ.பி, சென்றபோது, தொண்டர்கள் அவரது உருவம் பதித்த டி-ஷர்ட் போட்டு கொண்டு பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இதை பார்த்ததும் இப்போது பாஜகவுக்கு ஆசை வந்துவிட்டது.

உருவம் பதித்த சேலை
அதிலும் போட்டியாக வந்துள்ளது மோடிஜிதான். ஏற்கனவே அவரது உருவம் பதித்த டி-ஷர்ட்கள் இருந்தாலும், இப்போது புடவை பக்கம் கவனம் திரும்பி உள்ளது. குஜராத் மாநிலம் கோத்ராவில் பிரதமர் மோடியின் உருவம் பதித்த சேலை விற்பனைக்கு வந்திருக்கிறது.

செம கிராக்கி
பல வண்ணங்களில் சேலை ஒரு பக்கம் இருந்தாலும், அதற்குள் மோடியின் உருவம் தினுசு தினுசாக உள்ளது. ஒரு பெண்ணின் முந்தானையில்கூட மோடியின் பிரின்ட் இருக்கிறது. இதற்கு பெண்கள் மத்தியில் ஏகப்பட்ட கிராக்கி. மோடியின் சொந்த மாநிலம் ஒரு பக்கம், ஜவுளிக்கு பேர் போன சூரத் மற்றொரு பக்கம்.. இவை இரண்டும் சேர்ந்து பிரதமருக்கு இருக்கும் கிரேஸை கூட்டி வருகின்றன.

ஆர்டர்கள்
ஸ்பெஷலாக மோடி உருவப்படத்துடன் கூடிய இந்த புதுரக சேலைதான் இப்போது குஜராத்தில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த வரவேற்பை பார்த்ததும், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு விநியோகிக்க பாஜக தரப்பில் நிறைய ஆர்டர்கள் தரப்பட்டு வருகின்றனவாம்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications