நம்மளையே ஓவர் டேக் பண்ணிடும் போல.. ஸ்மார்ட் போன் யூஸ் பண்ணி மத்திய அமைச்சரை வியக்க வைத்த குரங்குகள்!
டெல்லி: மனிதர்களின் செயல்களை அப்படியே பிரதிபலித்து செய்யக்கூடிய தன்மை கொண்ட குரங்குகள் அவ்வபோது செய்யும் சேட்டைகள் இணையத்தில் வேகமாக பரவி நெட்டிசன்களை ரசிக்க வைப்பதாக இருக்கும். அந்த வகையில், ஸ்மார்ட் போனை மிகவும் நேர்த்தியாக குரங்குகள் பயன்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வியப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு நாட்டில் அதன் பயன்பாடு பெருகிவிட்டது.
அனைவரும் கைகளில் ஆறாம் விரலை போல ஸ்மார்ட் போன்களை வைத்துக்கொண்டு நடமாடுவதை பார்க்க முடிகிறது. ஓய்வு நேரங்கள் மட்டும் இன்றி பயணங்களின் போது ஏன்.. நடந்து சென்றால் கூட பலரும் குனிந்த தலை நிமிராமல் செல்போன்களையோ பார்த்துக்கொண்டு செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.

ஸ்மார்ட் போன் பயன்பாடு
போன் பேசுவது மட்டும் இன்றி உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு இணையம் மூலமாக அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் போன்களில் பார்த்துவிடலாம் என்பதால் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நேரமும் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே வருகிறது. மனிதர்களை பார்த்து அப்படியே பிரதிபலித்து செய்வதில் கைதேர்ந்தது குரங்குகள். ஒருசில நேரம் நாம் செய்யும் செயல்களை அப்படியே செய்து பார்த்து நம்மை வியக்க வைக்கும்.
|
கிரண் ரிஜிஜூ பகிர்ந்த வீடியோ
இப்படிப்பட்ட குரங்குகள் ஸ்மார்ட் போன் மட்டும் யூஸ் பண்ணாமல் விட்டுவிடுமா என்ன? அதையும் ஒரு கை பார்க்க தொடங்கியிருக்கின்றன இப்போதுள்ள குரங்குகள்.. அடிக்கடி செல்பிக்கு போஸ் கொடுப்பது.. ஸ்மார்ட் போன்களை வியந்து பார்ப்பது போன்ற செயல்களில் குரங்குகள் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை பார்த்து இருப்போம். அதேபோல ஒரு வீடியோவைத்தான் தற்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

3 குரங்குகள் ஒன்றாக சேர்ந்து..
இது தொடர்பாக கிரண் ரிஜிஜூ தனது வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "டிஜிட்டல் அறிவும் அதன் விழிப்புணர்வும் நம்ப முடியாத கட்டத்தை வெற்றிகரமாக எட்டியிருப்பதை பாருங்கள்" என்ற கேப்ஷனுடன் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவில் மூன்று குரங்குகள் ஒன்றாக சேர்ந்து ஸ்மார்ட் போன்களை வியப்போடு பார்ப்பதோடு.. ஸ்கிரீனை தொட்டு பார்க்கிறது. அதோடு மட்டும் இன்றி மிகவும் லாவகமாக தனது விரல்களால் ஸ்க்ரோல் செய்து பார்க்கிறது.

நேர்த்தியாக பயன்படுத்தும் குரங்குகள்
அருகில் இருக்கும் குரங்குகளும் எதோ எதோ வித்தை காட்டுறாங்க என்ற ரீதியில் ஸ்மார்ட் போனை உற்று நோக்கி பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் குரங்குகள் மிகவும் நேர்த்தியாக இந்த செல்போனை பயன்படுத்துகிறதே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் சிரிப்பதை பிரதிபலிக்கும் எமோஜிக்கள் மற்றும் ஜாலியான கருத்துக்களை போட்டு வருகின்றன.

நெட்டிசன்கள் கருத்து
சில நெட்டிசன்களோ.. குரங்குளும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிக்ட் ஆகிவிடும் போல தெரிகிறது என பதிவிட்டுள்ளனர். குரங்குகள் மிகவும் புத்திசாலித்தனம் கொண்டதை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோ இருக்கிறதே எனவும் சில நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் இல்லை.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications