தொடர்ந்து உயரும் கொரோனா பலி.. ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு.. திடீரென வேகமெடுப்பதால் மக்கள் அச்சம்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 815 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டது. ஆனால் தடுப்பூசி நடவடிக்கைகள், கொரோனா தீவிர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்கள் விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோல் முதல் அலை, இரண்டாம் அலையை போல் அல்லாமல், உயிரிழப்புகள் பெரிய அளவில் ஏற்படவில்லை.

மீண்டும் கொரோனா
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று 18 ஆயிரத்து 930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 13 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், கடந்த இரு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பரவல்
கடந்த ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 815 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனா பலி
கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால், ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,343 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சிறு உடல்நிலை பிரச்னைகள் ஏற்பட்டாலும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 15,899 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,93,7, 876 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது 1,22,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி பணிகள் தீவிரம்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் 17,62, 441 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 198.5 கோடியை கடந்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications