பாஜக டிக் அடித்த 50 தொகுதிகள் - நட்டாவிடம் ரிப்போர்ட் வழங்கிய நயினார் நாகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பிரச்சார வியூகங்கள், அரசியல் புள்ளிகளின் கட்சி மாற்றம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. தமிழ்நாடு அரசியலில் டிசம்பர் மாதம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக அமித்ஷா கூறியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி சென்றுள்ளார். இரவு பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் அவர், பாஜக போட்டியிட தேர்வு செய்துள்ள தொகுதி பட்டியலை வழங்கவுள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தங்களின் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் பலத்த வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளன. கூடவே நாம் தமிழர், தவெக கட்சிகளும் மல்லுகட்டுவதால் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.

nainar-nagendran-submitted-tamilnadu-bjp-contesting-constituency-with-jp-nadda

தமிழ்நாடு அரசியல்

திமுக உங்களுடன் ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களுடன் கட்சி ரீதியாகவும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மறுபக்கம் அதிமுக - பாஜக கூட்டணியில் புதிதாக எந்த கட்சிகளும் இணையவில்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரும் விலகிவிட்டனர். அதிமுகவில் இருந்து பல சீனியர்களும் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசியலில் எப்படியாவது ஆழமாக கால் பதிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக தமிழ்நாட்டிற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். கடந்த சில மாதங்களில் ஏற்கனவே அமித்ஷா பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி அமித்ஷா வேலூர் வருகை புரியவுள்ளார். நாளை திமுக வடக்கு மண்டல இளைஞரணி கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளது. அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ளவுள்ளனர்.

நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்

அதற்கு அடுத்த நாளே அமித்ஷாவின் வேலூர் வருகை இருப்பதால், வட மாவட்ட அரசியலில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் பாஜக தேசிய தலைவர்களுடன் ஆலோசனை செய்திருந்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2 நாட்கள் பயணமாக இன்று காலை டெல்லி சென்றுள்ளார்.

மாலை அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இன்று இரவு அவர் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை இன்று இரவு சந்திக்கவுள்ளார். அப்போது தமிழ்நாடு அரசியலின் தற்போதைய நிலை, திமுகவுக்கு எதிராக அமைக்க வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். முக்கியமாக 2026 தேர்தலில் பாஜக போட்டியிடுவதற்காக தேர்வு செய்துள்ள தொகுதிகளின் பட்டியலை நயினார் நட்டாவிடம் வழங்கவுள்ளார்.அதில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியல் உள்ளது.

தொகுதி பட்டியல்

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிருந்தது. இந்தமுறை 30- 35 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கட்சியின் சீனியர் நிர்வாகிகள் தங்கள் விருப்ப தொகுதிகளை பாஜக தலைமைக்கு தெரிவித்திருந்தனர். டெல்லி செல்வதற்கு முன்பு கூட எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நயினார் நாகேந்திரன் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் தொகுதி பங்கீடு தொடர்பாக நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருந்தார்கள். அதனடிப்படையில் நயினார் நாகேந்திரன் நட்டாவிடம் தொகுதி பட்டியலை வழங்கியுள்ளார். அமித்ஷா தமிழ்நாடு வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நயினாரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+