டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம்.. எடப்பாடிக்கு அழைப்பு.. ஓபிஎஸ்சை கைவிட்ட பாஜக?
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க தொடங்கியிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாட்னாவில் கூடி ஆலோசித்தன. அடுத்த கூட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்க, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பாஜக அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதற்கு சமீப காலமாக தமிழக பாஜகவிற்கும் அதிமுகவுக்கும் இடையே நடைபெறும் வார்த்தை போர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனசாமி, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.
தேர்தல் வருகிற போது நிச்சயம் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று சொல்வோம். பா.ஜ.க. பற்றி நாங்கள் ஏற்கனவே சொல்லி விட்டோம் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications