டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

செயற்கை வைரத்துக்கான சுங்க வரி குறைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: செயற்கையாக உருவாக்கப்படும் வைரத்திற்கு சுங்க வரி குறைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல், செயற்கை வைரங்களுக்கான உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, ஐஐடி-க்களில் ஆராய்ச்சி மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

New Scheme for indigenous production of lab grown diamonds in India

நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவை, ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதலுக்கு முக்கியத்துவம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து, செயற்கை வைரங்கள் உருவாக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்தார். அதில், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் செயற்கை வைரங்கள் உருவாக்கம் என்பது தொழில்நுட்பத்துடன் கூடிய புதுமையான ஆற்றல் சார்ந்த துறை. இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகும் சாத்தியங்கள் உள்ளது.

இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரம்..பாராட்டும் உலக நாடுகள்..முன்னேறிய பொருளாதாரம்..நிர்மலா பெருமிதம் இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரம்..பாராட்டும் உலக நாடுகள்..முன்னேறிய பொருளாதாரம்..நிர்மலா பெருமிதம்

இதனால் செயற்கை வைரங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, ஐஐடி-களில் ஐந்து ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல் செயற்கையாக உருவாக்கப்படும் வைரத்திற்கு சுங்க வரி குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

English summary
Nirmala Sitharaman has announced that the customs duty on lab grown diamonds will be reduced. Similarly, he has announced research grants in IITs to increase domestic production of lab grown diamonds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X